×
 

திடீர் துப்பாக்கிச்சூடு.. இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. தப்பியோடியவர்களை சுட்டுப்பிடித்த போலீசார்..!

கிருஷ்ணகிரி அருகே உறவினருடன் சென்ற பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள சையத்பாஷாமலையின் மேல் தர்கா மற்றும் கோயில் உள்ளது. இங்கு கடந்த 19 தேதி மதிய நேரத்தில் திருப்பத்தூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது உறவினருடன் சென்றுள்ளார். மலைப் பகுதியில் அமர்ந்து அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு மது போதையில் வந்த நான்கு இளைஞர்கள் அவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்த நகை, பணத்தை பிடிங்கி கொண்டு தாக்கி உள்ளனர். மேலும் அந்த இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.  அதனை வீடியோவாக எடுத்தும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

அவர்களிடமிருந்து தப்பிய இளம்பெண், இச்சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்களை கைது செய்ய போலீஸ் தனிப்படை களம் இறங்கியது. முதல் கட்டமாக அன்றைய தினமே 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் பொன்மலை குட்டை பெருமாள் கோயில் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையும் படிங்க: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. கம்யூட்டர் லேப்பில் அத்துமீறிய ஆசிரியர்.. புகார் பெட்டியால் வெளிவந்த உண்மை..!

இதனடிப்படையில் போலீசார் அங்கு விரைந்தனர். அங்கு பதுங்கி இருந்தவர்களை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்ய முயற்சித்த போது அவர்கள் இருவரும் மறைத்து வைத்திருந்த உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றனர். இதனால் போலீசார் தற்காப்பு நடவடிக்கையாக இருவரையும் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்துள்ளனர். போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் சுரேஷ் என்ற இளைஞருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் தப்பி செல்ல முயன்ற மற்றொரு குற்றவாளி நாராயணன் கால் முறிவு ஏற்பட்டு உள்ளது. 

காயமடைந்த 2 குற்றவாளிளையும், அவர்கள் கத்தியால் தாக்கியதில் காயமடைந்த 2 போலீசாரும் என 4 பேரையும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக போலீசார் அட்மிட் செய்தனர். குற்றவாளிகள் 2 பேரையும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை நேரில் ஆய்வு செய்தார். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.  

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாகவும், கொலை கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்திருப்பதே இதற்கு காரணம் என்றும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல் போலீசாரை தாக்கிவிட்ட தப்ப முயன்றவர்களை போலீசார் துப்பாக்கிசூடு நடத்தி கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

இதையும் படிங்க: சீரியஸ் ரேப்பிஸ்ட் கைது..! சிறுமிகளை மட்டும் குறிவைத்து சிதைக்கும் சைக்கோ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share