×
 

பள்ளி மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்... கிருஷ்ணகிரி “சார்களுக்கு” எதிராக வழக்கறிஞர்கள் எடுத்த அதிரடி முடிவு! 

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராக போவதில்லை கிருஷ்ணகிரி வழக்கறிஞர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராக போவதில்லை கிருஷ்ணகிரி வழக்கறிஞர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மகாதேவ கொல்லஹள்ளி அரசு நடுநிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை பள்ளி ஆசிரியர்களே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே அதிர வைத்துள்ளது. கடந்த ஒரு மாதமாக மாணவி பள்ளிக்கு வராத நிலையில் தலைமை ஆசிரியர் மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியதில் மாணவி கர்ப்பம் அடைந்து கருக்கலைப்பு  செய்தது இருப்பது தெரிந்தது. பள்ளி மாணவி புகாரை அடுத்து அதே பள்ளியை சார்ந்த ஆசிரியர்கள் சின்னசாமி (57), ஆறுமுகம் (37), பிரகாஷ் (37) ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தற்போது மாணவியிடம் தவறாக நடந்த ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இதனிடையே, தமிழகத்தையே அதிர வைத்த இந்த விவகாரத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்களுக்காக யாரும் நீதிமன்றத்தி வழக்காட மாட்டோம் என கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை ஓசூர் போச்சம்பள்ளி ஆகிய நீதிமன்ற வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக முன்வரக்கூடாது என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தாருக்கு வழக்கு சங்கம் சார்பில் ஆதரவாக மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: மாணவியை நாசமாக்கிய பள்ளி ஆசிரியர்கள்... திமுக அரசை வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

இதையும் படிங்க: மாணவியை நாசமாக்கிய பள்ளி ஆசிரியர்கள்... திமுக அரசை வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share