×
 

அதிமுக நிர்வாகிக்கு பளார் விட்ட முன்னாள் அமைச்சர்.. ஆவேசமடைந்த ராஜேந்திர பாலாஜி.. அதிமுக கூட்டத்தில் நடந்தது என்ன.?

விருதுநகரில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் கட்சி நிர்வாகி கன்னத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பளார் என அறைந்த சம்பவம் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனி கிரேஸ் இருக்கும். அவர்களை நேரில் பார்பதற்கும், உடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்ளவும் ஆர்வம் அதிகமாக இருக்கும். இதனால் இவ்வாறான பிரபலங்களை காண, சாதாரண மக்கள் திரண்டு வருவார்கள். கூட்டமும் அதிகரிக்கும். இது சில சமயங்களில் அந்த செலிபிரிட்டிக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், அதீத கூட்டத்தால் அவர்களும் தன்னிலை மறந்து செயல்படுவது நடப்பதுண்டு. சமீபத்தில் செல்பி எடுக்க முன் வந்த ரசிகர் கன்னத்தில் அறைந்த நடிகர், பொன்னாடையை பிடிங்கி தூக்கி வீசிய நடிகர் என பல நிகழ்வுகளை நாம் பார்த்திருக்கிறோம். எனினும் பல பிரபலங்கள் தங்களது பிசியான வேலையிலும், ரசிகர்களுக்காக பொறுமையாக காத்திருந்து போட்டோவுக்கு போஸ் தருவதும் உண்டு. தங்களது குடும்பத்தில் ஒருவர் போல பேசி நலம் விசாரிப்பதும் உண்டு.

சினிமா பிரபலங்கள் மீது மட்டுமல்ல. தாங்கள் பின்தொடரும் கொள்கை சார்ந்த தலைவர்கள் மீதும் மக்களுக்கு பேராவல் எழுவதுண்டு. மக்களுக்கே இப்படி என்றால், தொண்டர்கள் இன்னும் ஒருபடி மேலே போய், கட்சி தலைவர்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை வீட்டில் மாட்டி அழகு பார்ப்பதும் உண்டு. தங்கள் பகுதிக்கு வரும் தலைவர்களுக்கு பேனர் வைப்பது. தங்களது செலவில் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிப்பது. ஆள் உயரம் முதல் 60 அடி உயரம் என மாலைகள் வாங்கி அணிவிப்பது, வீர வாள், போர் வாள் போன்றவற்றை பரிசளித்து மகிழ்வது என தங்களது அன்பை பலவாறு வெளிப்படுத்தி மகிழ்வர். இதுபோல், தனக்கு பொன்னாடை போர்த்த, கூட்டத்தை முந்திக்கொண்டு வந்த கட்சி நிர்வாகியை முன்னாள் அமைச்சர் ஒருவர் கன்னத்தில் அறைந்து கண்டித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

இதையும் படிங்க: "துரோகிகளுக்கு இறைவன் தண்டனை தருவான்"... செங்கோட்டையனின் ஆவேச கருத்தால் அதிமுகவில் சலசலப்பு.!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.  இந்த பொதுக்கூட்டத்திற்கு அவைத் தலைவர் விஜயகுமரன் தலைமை தாங்கினார்.  இதில் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தின் துவக்கத்தில் முன்னாள் அமைச்சர் கே.டிராஜேந்திர பாலாஜிக்கு பொன்னாடை அணிவித்து வெள்ளிவாள் வழங்கப்பட்டது. மேலும் பலரும் பொன்னாடை அணிவிக்க திரண்டு வந்தனர். அப்போது விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த  கிழக்கு ஒன்றிய எம்ஜிஅர் மன்ற துணைச் செயலாளர் நந்தகுமார், வரிசையில் முந்திக் கொண்டுபொன்னாடை அணிவிக்க வந்தார். வரிசையில் வராமல் முந்திக் கொண்டு வருவதஒ பார்த்த கே.டி ராஜேந்திர பாலாஜி, அவரது கன்னத்தில் அறைந்தார். இதையடுத்து கட்சி நிர்வாகியையும் கடிந்து கொண்டார். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக பொதுக்கூட்டத்தில் நிர்வாகியை முன்னாள் அமைச்சர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அந்த மனுசனுக்கு நாக்குனு ஒண்ணு இருக்கா..? எடப்பாடியாரை குறி வைத்து குதறும் திமுக அமைச்சர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share