×
 

'வெட்டி எறியவும் தயங்க மாட்டேன்..?' மேடையிலேயே 'எக்ஸ்' அமைச்சரை மிரட்டிய கே.டி.ஆர்..!

எனக்கு பின்னால் உள்ள அதிமுக தொண்டர்கள் வாள் ஏந்திய படை வீரர்கள். விருதுநகர் மாவட்ட அதிமுகவில் என்னை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மேடையிலேயே அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜை ஒருமையில் பேசி மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகாசி அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் மாஜி அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு ராஜேந்திர பாலாஜி பேசிய அவர், ''நீ செய்வதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்க நான் ஒன்றும் பைத்தியக்காரன் இல்லை. நான் அதிமுகவில் குறுநில மன்னர்தான். எனக்கு பின்னால் உள்ள அதிமுக தொண்டர்கள் வாள் ஏந்திய படை வீரர்கள். விருதுநகர் மாவட்ட அதிமுகவில் என்னை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது. அதிமுகவுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குழி பறிக்கும் வேலை நடக்கிறது. 

இதையும் படிங்க: பாஜகவுக்கு சப்போர்ட்டா.? இந்தா வாங்கிக்கோங்க... அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வை தூக்கியடித்த எடப்பாடி...! 

காலில் விழுந்த வரலாறு எனக்கு இருக்கு... உனக்கு என்ன வரலாறு இருக்கு...? நான் என்ன கிறுக்கன்னா... உன்ன தொலைச்சுருவேன் பார்த்துக்கோ...!விருதுநகர் மாவட்டத்தினுடைய  ஒரே பொறுப்பாளர் நான். திண்டுக்கல் வேட்பாளரை ஜெயிக்க வைத்து நான் தான் கொண்டு போய் நிப்பாட்டினேன். அம்மா என்னை பாராட்டினார்கள். சரியான ஆள் என்றார்கள். ஒருங்கிணைந்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக நான் இருந்திருக்கிறேன். உனக்கு என்னடா தகுதி இருக்கு. நீ என்னைப் பற்றி சொல்வதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கு.

நீ நல்ல ஆம்பளை நேரில் வந்து சொல்ல வேண்டும். ஓடி சென்னையில் போய் உட்கார்ந்து கொள்கிறாய். அதிமுகவுடைய கிளைச் செயலாளர், அதிமுகவின் தொண்டர்கள், அதிமுகவின் கரைவேட்டி கட்டியவர்கள், எம்ஜிஆர் பக்தர்கள், அம்மாவுடைய பக்தர்கள், எடப்பாடி உடைய என் தம்பிகளுக்கு நான் கட்டுப்படுகிறேன். அவர்களுக்காக எதையும் செய்வேன். கோபம் வந்தாலும் மறுநாள் அணைத்துக் கொள்வேன். காரணம் நம்மோடு இருந்தவர்கள். நம்மோடு உழைத்தவர்கள். ஆகையால் அவர்கள் சொல்வதை நான் கேட்பேன்.


கட்சியை காட்டிக்கொடுத்தவர் மாபா பாண்டியராஜன். எனக்கு வரலாறு உள்ளது. உனக்கு என்ன வரலாறு இருக்கு? நீ செய்வதெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க நான் ஒன்றும் கிறுக்கன், பைத்தியக்காரன் அல்ல, தொலைத்துவிடுவேன். என்னைப் பற்றி பேச வேண்டுமானால் விருதுநகரில் வைத்து பேச வேண்டும். சென்னையில் சென்று ஏன் பேசுகிறாய்? எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்து குழி பறிக்கும் வேலை நடைபெற்று வருகிறது'' என ஆவேசமாகப் பேசினார்.

விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த, கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நந்தகுமார் பொன்னாடை அணிவிக்க வந்தார். ராஜேந்திர பாலாஜிக்கு பொன்னாடை அணிவித்துவிட்டு, அருகே அமர்ந்திருந்த பாண்டியராஜனுக்கு பொன்னாடை அணிவிக்கச் சென்றார். அப்போது, திடீரென தனது இருக்கையிலிருந்து எழுந்த ராஜேந்திர பாலாஜி, "யார் மாவட்டச் செயலாளர் எனத் தெரியாதா?’ எனக் கேட்டவாறு நந்தகுமார் கன்னத்தில் அறைந்தார். அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் உடனடியாக நந்தகுமாரை மேடையிலிருந்து இறக்கி, அழைத்துச் சென்றனர்.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share