லேடி கெட்டப் போட்டு இரவில் விசிக நிர்வாகி சில்மிஷம்..! இயக்குநரின் மனைவிக்கு டார்க்கெட்..!
தொடர்ந்து இரவில் பெண் வேடமிட்டு விக்ரமன் சுத்திய நிலையில், முதலில் விக்ரமனை பெண் என நினைத்திருக்கிறார்கள்.
அடுக்குமாடி குடியிருப்பில் தூங்கிக் கொண்டிருந்த நபரிடம் பெண் வேடமிட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பிக் பாஸ் பிரபலமும், விசிக பிரமுகருமான விக்ரமன், கையும் களவுமாக சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, ஐயப்பன் தாங்கல் பகுதியில் கேட்டேட் கம்யூனிட்டி அடுக்குமாடி குடியிருப்பில், தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜூமுருகன் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பாலியல் குற்றங்கள் நிகழ்வதாகவும், பராமரிப்புக்குத்தான் முன் தொகை அளிக்க முடியாது என தெரிவித்ததால் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் இயக்குனர் ராஜூ முருகனின் மனைவி புகார் அளித்தார்.
இதையும் படிங்க: இஸ்லாமியர்- கிறிஸ்தவர் பட்டியல் சமூக வாக்குகள் சிதறடிப்பு- பதறும் திருமா..!
இந்த நிலையில் இயக்குனரின் மனைவி கேள்வி எழுப்பியதுது தொடர்பான விபரங்களும், வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன. அதில் 2024 ஆம் ஆண்டு மே மாதம் வரை வசித்து வந்த பிக் பாஸ் பிரபலமும், விசிக பிரமுகர்மான விக்ரமன், அதிகாலை இரண்டு மணி அளவில் பெண் வேடமிட்டு அடுக்குமாடி குடியிருப்பில் தூங்கிக் கொண்டிருந்த 23 வயது ஆண் ஊழியரிடம் பாலியல் ரீதியாக தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அந்த நபர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்
.
தொடர்ந்து இரவில் பெண் வேடமிட்டு விக்ரமன் சுத்திய நிலையில், முதலில் விக்ரமனை பெண் என நினைத்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக அந்த ஊழியர் தொந்தரவு செய்யப்பட்டதால், சக ஊழியர்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் மறைந்திருந்து அவரை பிடித்த போது, அவர் பெண் அல்ல... அவர் விக்ரமன் என்பதும் தெரியவந்தது.
பிடிபட்டவர் அரசியல்வாதி என்பதாலும், பிரபலம் என்பதாலும் அவரை தனி இடத்திற்கு அழைத்துச் சென்று போலீசாருக்கு தகவல் கூறாமல் இரவோடு இரவாக அவரை அங்கிருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது. மேலும் விக்ராமனை பிடித்தபோது வீடியோ எடுத்தவர்களை விரட்டி அடித்ததாகவும் அவற்றை பெற அதற்காக பெரும் தொகையும் விக்ரமணியிடம் வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அறிந்த இயக்குனர் ராஜூமுருகனின் மனைவி தனது 13 வயது மகளை வாகனம் நிறுத்தி வாகனம் நிறுத்தி வைக்கும் இடத்திற்கு அனுப்ப கூட பயமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய என்ன நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படுகின்றன என குடியிருப்பு நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பியதால் அவரை டார்கெட் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக, விக்ரமன் பெண் வேடம் விட்டு சென்றதாக தெரியவந்துள்ளது.
விக்ரமனுக்கு திருமணமான நிலையில் பெண் வழக்கறிஞர் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் அவர் பெண் வேடமிட்டு அடுக்குமாடி குடியிருப்பில் இரவு வேட்டையாடி சிக்கிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் விக்ரமன் மற்றும் நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் வேறு யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா? என விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: இளையராஜாவுக்கு இசை ஞானியைவிட மெய் ஞானியே பொருத்தம்.. நேரில் சந்தித்து வியந்த திருமாவளவன்.!