×
 

லால்குடி அன்பில் மாரியம்மன் கோயில் தேரோட்டம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலின் உபகோயிலாக மாரியம்மன் கோயில் பங்குனி தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலின் உபகோயிலாக மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி தேர் திருவிழா கடந்த மார்ச் 30 தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில்  சிம்ம வாகனத்திலும், காமதேனு வாகனத்திலும், ரிஷப வாகனத்திலும், அன்னபக்க்ஷமி வாகனத்திலும், யானை வாகனத்திலும், சேஷ வாகனத்திலும், குதிரை வாகனத்திலும், பல்லக்கிலும், திருவீதி உலா நடைபெற்றது.

இதையும் படிங்க: 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலுக்கு நடைபெற்ற பாலாலயம்.. நீதிமன்ற உத்தரவையும் மீறி சலசலப்பு.. அதிரடி காட்டிய போலீசார்!

விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம் இன்று மாலை 5.45 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து லால்குடி அன்பில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது கோவிலை சுற்றி வந்து நிலையை அடைந்தது. தேரோட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பி தினேஷ்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். 
 

இதையும் படிங்க: சிங்கிபுரம் கோயில் திருவிழா: களத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்... அடக்கிய வீரர்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share