மனோ தங்கராஜ் மனைவி மீதான நில அபகரிப்பு வழக்கு.. ரத்து செய்ய சென்னை ஐகோர்ட் மறுப்பு..!
முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் மனைவி மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் மனைவி அஜிதா மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி தி.மு.க., மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் அஜிதா மனோ தங்கராஜ், நாகர்கோவிலை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் தயா பாக்ய சிங் என்பவருக்கு சொந்தமான நிலத்துக்கு போலி ஆவணம் தயாரித்து சரவண பிரசாத் என்பவருக்கு விற்றதாகக் கூறி, நாகர்கோவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் மனைவி அஜிதா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: மா.சுப்ரமணியன் மீதான நில அபகரிப்பு புகார்.. ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு..!
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி அஜிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், முன்னாள் திமுக அமைச்சர் மனோஜ் தங்கராஜின் மனைவி அஜிதாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நிலஅபகரிப்பு வழக்கைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் கடுமையான பிரிவுகளிலேயே வழக்கு பதியப்படுவது வழக்கம். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நிலஅபகரிப்பு மற்றும் அதற்கான இழப்பீடு சட்டங்களாக இருந்தாலும் சரி, முந்தைய அதிமுக ஆட்சி அதாவது ஜெயலலிதா காலத்தில் கொண்டு வரப்பட்ட நில அபகரிப்புக்கான தனிப்பிரிவாக இருந்தாலும் சரி இத்தகைய வழக்குகளை மிக தீவிரமாக கையாள்கிறது.
அத்தகையதொரு பிரிவில் தான் தற்போது முன்னாள் அமைச்சர் தங்கராஜ் மனைவி அஜிதா மீதும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு இத்தனைக் கோடி இழப்பீடா..?