நிலத்தகராறு பிரச்னைக்கு இப்படியா? திமுக பெண் நிர்வாகி அட்டூழியம்.. காரால் தகரக் கொட்டகையை இடித்து தள்ளி ஆவேசம்..!
நிலத்தகராறில் தி.மு.க பெண் நிர்வாகி, காரை ஓட்டிச் சென்று தகரக் கொட்டகையை இடித்து தள்ளிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே உள்ள கொன்னையம்பட்டியை சேர்ந்தவர் சத்யா. அவரது வயது 32. இவர் அய்யலூர் நகர திராவிட முன்னேற்ற கழக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகியாக உள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் - வசந்தா தம்பதிகளுக்கும் இடையே சில காலமாக நிலப்பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் சத்யாவின் குடும்பத்தினர் பிரச்சனைக்குரிய இடத்தில் முறைகேடாக குடிநீர் குழாய் அமைத்துள்ளனர். இதுகுறித்து வசந்தா தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு புகார் மனு அளித்துள்ளார். அதனைத்தொடர்ந்து அய்யலூர் பேரூராட்சி அதிகாரிகள் சத்யா குடும்பத்தினர் அமைத்த குழாய் இணைப்பை துண்டித்து அப்புறப் படுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த சத்யா தனது தந்தையின் காரை ஓட்டிச் சென்று வசந்தா வீட்டின் முன்பு அமைத்திருந்த கூரை கொட்டகையை இடித்துள்ளார். அந்த நேரம் கொட்டகையில் யாரும் இல்லாததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. சிறுவர்கள் அதிகம் உலாவும் இடத்தில் சத்யா இவ்வாறு செய்தது கிருஷ்ணன் - வசந்தா தம்பதி இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிலத்தகராறு காரணமாக பிரச்னை இருந்தாலும் அதற்காக இப்படி உயிருக்கே மிரட்டல் விடுக்கும் சம்பவத்தில் ஈடுபடலாமா என கிருஷ்ணன் - வசந்தா தம்பதி கேட்டுள்ளனர். அதற்கு இது திட்டமிட்டு செய்த சம்பவம் அல்ல என்றும், கார் கட்டுப்பாட்டை இழந்து இப்படி நடந்து விட்டதாலும் சத்யா திமிராக பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க: கடும் வறுமை... கரண்ட் பில் கட்ட கூட காசு இல்லை...! உருக்கமாக பேசிய அமைச்சர் துரைமுருகன்..!
எதிர்பாராத சம்பவமாக இருந்தாலும், இப்படி ஒரு சம்பவம் நடந்ததும் மன்னிப்பு கேட்பது தானே நடைமுறை. ஆனால் சத்யா குடும்பத்தினர், இதனை தட்டி கேட்ட வசந்தா மற்றும் கிருஷ்ணன் தம்பதியினரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பதிலுக்கு வசந்தா - கிருஷ்ணன் குடும்பத்தினரும் சத்யா குடும்பத்தினரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுக்க பெரு பரபரப்பானது. அக்கம்பக்கத்தினர் திரண்டு இரண்டு குடும்பத்தினரையும் சமாதானப்படுத்தினர். மேலும் இதில் காயமடைந்த வசந்தா திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் இரண்டு தரப்பையும் சேர்ந்த 10 பேர் மீது வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சத்யாவின் தந்தை கணேசன் மறுத்தரப்பினரை மிரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் கொட்டகை தானே போச்சு.. யாரும் இறக்கவில்லையே.. இந்த பிரச்னையை இத்தோடு விட்டுவிடுங்கள் என்று கணேசன் பேசுகின்றார். கார் எதிர்பாரத விதமாக தான் இப்படி கொட்டகைக்குள் சென்றுவிட்டது என்றும் சமாளித்தார். அது எப்படி உங்கள் வீட்டு கார், அங்கிருந்து இதுவரை சரியாக வந்துவிட்டு எங்கள் கொட்டகைக்குள் புகும் என கிருஷ்ணன் கேட்க, அதுலாம் எதுக்கு எவ்வளவு செலவாகும்னு சொல்லுங்க.. கொடுத்துடுறோம்.. காசை வாங்கிக்கோங்க. இந்த பிரச்னையை இதோடு விட்டுவிடுங்கள் என கணேஷன் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: திமுக ஒரு திட்டத்தை எதிர்த்தால் அது சூப்பர்ன்னு அர்த்தம்.. மக்களுக்கு பாடம் எடுத்த ஹெச்.ராஜா!