மீண்டும் மொழி போர்கொடி..! திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் எழுந்த சர்ச்சை..!
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வாகனங்களுக்கான பார்க்கின் கட்டணம் வசூல் மையத்தில் வடமாநில இளைஞர்கள் சிலர் தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியாது என சொல்லி அடாவடியில் ஈடுபட்ட சம்பவம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
நூற்றாண்டுக்கும் தீராத பிரச்சனையாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த மொழி பிரச்சனை. அந்த வகையில் தற்போது திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் போர் கொடி தூக்கியுள்ளது இந்த மொழி பிரச்சனை. தமிழகத்தில் சென்னைக்கு பிறகு இரண்டாவது பெரிய பன்னாட்டு விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் ஏங்கி வருகிறது. சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு 3000-க்கும் மேற்பட்ட பயணியர் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.
விமான நிலையத்தில் போதிய வசதிகள் இருந்தாலும், பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது இந்த பார்க்கிங் பிரச்சனை. திருச்சி சர்வதேச விமான நிலைய வளாகத்தில் கார் பார்க்கிங் மற்றும் அதற்கான கட்டண வசூல் மையத்தில் வட மாநில இளைஞர்கள் சிலர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சிக்கு விமானத்தில் அந்த உறவினரை அழைத்துச் செல்ல வந்த ஒருவர் பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்திவிட்டு அதற்கான கட்டணத்தை மையத்தில் செலுத்தியுள்ளார். அதனை அடுத்து அவரது உறவினர் வந்ததும் காரை பார்க்கின் பகுதியில் இருந்து வெளியே எடுத்துச் சென்று வருகைப் பகுதியில் நிறுத்திவிட்டு உறவினரை வரவேற்கச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: கூட்டணி இருக்கும்போது 'வேட்டு' அணி எதற்கு..? எடப்பாடியார் போட்ட சபதம்..!
அப்போது இருவரும் திரும்பி வந்து பார்த்தபோது கட்டன வசூல் மையத்தில் இருந்தவர்கள் காரை பூட்டி உள்ளனர். இது குறித்து கார் ஓட்டுநர் அங்கிருந்தவர்களிடம் கேட்டதற்கு கூடுதல் நேரம் காரை நிறுத்தியதால் 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதற்கு அபராத தொகையை செலுத்திய காரு உரிமையாளர் விளக்கம் கேட்டதற்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் எதுவும் தெரியாது ஹிந்தி மட்டுமே தெரியும் எனக்கூறி ஹிந்தியில் பேசியதோடு கார் சாவியை திரும்ப ஒப்படைக்காமல் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அவர் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவிப்பதாக கூறிய போதிலும் அந்த இளைஞர்கள் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் மீண்டும் வாக்குவாதத்திலேயே ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாக்குவாதத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் அந்த நபர் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் கார் பார்க்கிங் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்றும் இவ்வாறு மொழி தெரியாத இளைஞர்களை இங்கு பணியாற்ற வைப்பது பயணியருக்கும் வேலை வேலை செய்யும் இளைஞர்களுக்கும் பெரும் சங்கடத்தை ஏற்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் பேச தெரிந்தவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என விமான பயணியர் மற்றும் அவர்களுடன் சென்ற உறவினர்களின் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மகா கும்பமேளா பற்றி தவறான கருத்துகளை பரப்பிய 140 சமூக ஊடகங்கள் மீது வழக்கு