×
 

தாழ்வாக பறந்த போர் விமானங்கள்; பெரம்பலூரில் பரபரப்பு - காரணம் என்ன?

பெரம்பலூர் அருகே கிராமப்புறங்களில் அதீத சத்தத்துடன் தாழ்வாக பறந்த விமானங்களை கிராம மக்கள் ஆச்சர்யத்துடன் கண்டு கழித்தனர். 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ள V.களத்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் இன்று முற்பகல் 11 மணி அளவில் இரண்டு விமானங்கள் ஒரே நேரத்தில் வானில் வட்டமிட்டபடி வானில் வலம் வந்துள்ளன.  தென்புறத்திலிருந்து வடக்கு நோக்கி கடலூர் மாவட்டத்தின் வழிய இரண்டு பயிற்சி விமானங்கள் வந்து சென்றுள்ளன. 10 நிமிடத்திற்கும் மேலாக தொடர்ந்து 4 முறை வட்டமடித்துள்ளன.  

அப்பகுதியில் போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று தான் என்றாலும், ஒரு கட்டத்தில் அந்த விமானங்கள் வழக்கத்திற்கு மாறாக மிகத் தாழ்வான உயரத்தில் அதிக சத்தத்துடன் பறக்க தொடங்கியுள்ளன. இதனை கண்ட கிராம மக்கள் முதலில் அச்சமடைந்தாலும் பிறகு அந்த விமானங்களை  அன்னாந்து பார்த்து ஆச்சர்யமடைந்துள்ளனர். ஒரு சிலர் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கான்ட்ராக்ட் செவிலியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! 

இது குறித்து விசாரித்த போது பெரம்பலூரிலிருந்து சுமார் 85 கி.மீ தொலைவிலுள்ள  தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வரும்  விமான பயற்சித்தளத்திலிருந்து அருகிலுள்ள கொள்ளிடம் மற்றும் காவிரி ஆற்று படுகைகளின் மேல்  பயிற்சிக்காக விமானங்கள் வானில் பறந்துள்ளன. 

அப்போது விமானங்களுக்கு  உரிய சிக்னல் கிடைக்காததால் ஒரு சில நேரங்களில் இதுபோல் உள் மாவட்டங்களுக்குள்  சென்று வான் வெளியில் பறப்பதுண்டு எனவும், இதைக்கண்டு யாரும் அச்சப்பட தேவையில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க: 'திமுகவை நக்கிப் பிழைக்கிறோமா..?' கூட்டணியில் ஊசலாட்டம்..? கடுப்பாகும் திருமாவளவன்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share