ஒரு நாளைக்கு ரூ.200 கோடி நஷ்டம்..! ஸ்ட்ரைக் நீடிக்கும்.. டேங்கர் லாரி உரிமையாளர்கள் திட்டவட்டம்..!
தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் என டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஈடுபட்டுள்ளது. சமையல் கியாஸ் கொண்டு செல்லும் பணிக்க எல்பிஜி டேங்க் வரலாறுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் பெற்று டேங்கர் லாரி உரிமையாளர்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நடப்பாண்டு முதல் 2030 ஆம் ஆண்டு வரையிலான ஒப்பந்தம் தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள சில அறிவிப்புகள் தங்களுக்கு ஏற்புடையதாக அல்ல என்று லாரி உரிமையாளர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
புதிய ஒப்பந்த விதிகளில் 2 அச்சு லாரிகளை பயன்படுத்த கூடாது, 3 அச்சு லாரிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாற்று ஓட்டுனர் இல்லாத பட்சத்தில் ரூ.20 ஆயிரம் அபராதம் வதிக்கப்படும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்காத நிலையில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவித்தனர். நேற்று முதல் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கிடங்குகளில் இருந்து பாட்டலிங் பிளான்டுகளுக்கு கியாஸ் ஏற்றிச்செல்லும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இதனால் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நஷ்டத்துக்கு லாரி ஓட்ட முடியாது! டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்கால் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்!
டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தோடு எண்ணெய் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சுமுக உடன்பாடு ஏற்படாததால் கோரிக்கை நிறைவேறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய தென்மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், ஒரு டேங்கர் லாரியில் 18 ஆயிரம் கிலோ கியாஸ் நிரப்பப்பட்டு கொண்டு செல்லப்படும். அதன் மூலம் 1200 சிலிண்டர்கள் நிரப்பப்படும். கடந்த 2 நாட்களில் 3 ஆயிரம் டேங்கர் லாரிகள் இயங்காததால் 36 லட்சம் சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் பணி தடை ஏற்பட்டுள்ளது என்று கூறினர்.
இதனால் நாள் ஒன்றுக்கு ரூ. 200 கோடி ரூபாய் வீதம் 2 நாட்களில் 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர். மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோரிடம் முறையிட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நஷ்டத்துக்கு லாரி ஓட்ட முடியாது! டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்கால் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்!