செல்போன் நட்பால் வந்த விபரீதம்.. 5 நாட்கள் சித்ரவதை... 17 வயது சிறுமியை சிதைத்த கொடூரன் கைது..!
மத்திய பிரதேசத்தில் 17 வயது சிறுமியை 5 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 2 ஆண்டுகளுக்கு முன் உத்தரபிரதேசத்தில் உள்ள ஜலாவன் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழாவிற்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளார். உறவினர்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்துள்ளார். அப்போது அங்கு ஒரு இளைஞனின் அறிமுகம் சிறுமிக்கு கிடைத்துள்ளது. இருவரும் நன்றாக பேசி நண்பர்களாக மாறினர். பின்னர் திருமண நிகழ்வு முடிந்து வீடு திரும்புகையில் அந்த இளைஞரிடம் சிறுமி தந்து மொபைல் எண்ணை பகிர்ந்துள்ளார். அதன் பின் இருவரும் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளனர்.
2 வருடம் இந்த நட்பானது தொடர்ந்துள்ளது. இதற்கிடையே இருவரும் நெருக்கமாக பேசி வந்துள்ளனர். சிறுமி தனது அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது அந்த இளைனரின் நடவடிக்கையில் சிறுமி மாற்றத்தை கண்டுள்ளார். அதனால் அவரிடம் பேசுவதை சிறுமி தவிர்த்துள்ளார். சில காலம் இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் திடீரென சிறுமிக்கு கால் செய்த அந்த இளைஞன், சிறுமியை தனிமையில் சந்திக்க வேண்டும் என வற்புறுத்தி உள்ளான்.
இதையும் படிங்க: இதுதாண்டா மோடி..! 10,12 -ம் வகுப்பு தேர்வு பாதிக்கப்படக்கூடாது.. 15 நிமிடம் தனது கான்வாயை தாமதப்படுத்திய பிரதமர்..!
அதற்கு சிறுமு மறுப்பு தெரிவித்துள்ளார். அப்போது அந்த சிறுமியின் அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோவை மீண்டும் அந்த சிறுமிக்கே அனுப்பி, இதை இணையத்தில் பகிர்வேன் என அந்த இளைஞன் மிரட்டி உள்ளான். சிறுமி மற்றும் அவளது குடும்பத்தினரின் மானம் தப்பிக்க வேண்டும் என்றால் நான் சொல்லும்படி கேட்க வேண்டும் எனவும் மிரட்டினான். இளைஞனின் மிரட்டலுக்கு பயந்த அந்த சிறுமியோ, அவன் சொல்லும்படி கேட்பதாக கூறி உள்ளாள். இதையடுத்து சிறுமியை ஜான்சி நகருக்கு தனியே வரும்படி இளைஞன் வற்புறுத்தி உள்ளான்.
வேறு வழி தெரியாத சிறுமியோ, இளைஞனின் மிரட்டலுக்கு பயந்து ஜான்சி நகருக்கு சென்றுள்ளாள். அங்கு சென்றதும் சிறுமியை ஒரு அறைக்கு அழைத்து சென்ற அந்த இளைஞன், அந்த அறையிலேயே வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். ஒருமுறை, இரண்டு முறை என்றில்லாமல் சிறுமியை 5 நாட்கள் அடைத்து வைத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். 5 நாட்களில் சிறுமியின் உடல்நிலை மோசமானது. எப்படியோ அந்த இளைஞனிடம் இருந்து தப்பிய சிறுமி மீண்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
இதற்கிடையே மகளை காணவில்லை என அவரது பெற்றோர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்துள்ளனர். மகள் கிடைத்ததும் போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி தனக்கு நேர்ந்த துயர் குறித்து விவரித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த பல்கலைக்கழக காவல் நிலைய போலீசார் விசார்ணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு கிருஷ்ண லால் சந்தனி இதுகுறித்து தீவிர விசாரணை நடப்பதாகவும், குற்றவாளியை போலீசார் தேடி வருவதாகவும், குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவான் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: சீரியஸ் ரேப்பிஸ்ட் கைது..! சிறுமிகளை மட்டும் குறிவைத்து சிதைக்கும் சைக்கோ..!