×
 

TNPSC தேர்வில் உதவியாளர் தேர்வு செய்வதில் சிக்கல்..  செயலாளரிடம் உரிய விளக்கம் கேட்டு நீதிமன்றம் உத்தரவு..

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில், மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதும்  உதவியாளரை, தேர்வு எழுதும் நபரே தேர்வு செய்ய அனுமதி வழங்க கோரிய மனுவில் டிஎன்பிஎஸ்சி செயலாளரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை,பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த  Dr.B.முருகன், என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், டிஎன்பிஎஸ்சி தேர்வின் போது, மாற்றுத்திறனாளி தேர்வர், அவர் விருப்பபடி,  உதவியாளரை அழைத்து செல்ல அனுமதி இல்லை. இதனால் தேர்வின் போது, மாற்றுத்திறனாளி தேர்வரும், டிஎன்பிஎஸ்சியால் நியமிக்கப்பட்ட உதவியாளரும்  சந்திக்கும் போது,  மாற்றுதிற னாளி சொல்வதை  புரிந்து கொண்டு , தேர்வு உதவியாளர் தேர்வு எழுத இயலவில்லை.

இதனால்,  போட்டி தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து,  தேர்வில் வெற்றி பெற இயலவில்லை. எனவே,UPSC தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு,  தேர்வு எழுதும் உதவியாளரை,  தேர்வரே தேர்வு செய்து செல்லும் உரிமை உள்ளது போல்,  டிஎன்பிஎஸ்சி தேர்விலும் கடைபிடிக்க வேண்டும்.

2021 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வுகளை நடத்துவதற்கான தமிழ்நாடு வழிகாட்டுதல்களிலும் தெளிவாக கூறி உள்ளது. எனவே,2021 மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வுகளை நடத்துவதற்கான தமிழ்நாடு வழிகாட்டுதல்களின்படி,  தேர்வு எழுதும் போது விண்ணப்பத்தில் உள்ள கோரிக்கையின் அடிப்படையில் , உருப்பெருக்கி, பிரெய்லி வாட்ச் மற்றும் கணித வாரியத்தை வழங்க வும் உத்தரவிட வேண்டும்.

இதையும் படிங்க: மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் சாதனை... இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்!!

டிஎன்பிஎஸ்சி  நடத்தும் தேர்வுகளில், மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதும் போது தங்களுக்கு தேர்வு எழுதும்  உதவியாளரை தேர்வு எழுதும் நபரே தேர்வு செய்து அழைத்து செல்ல அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு,  ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரின் மனு குறித்து டிஎன்பிஎஸ்சிசெயலாளரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: தீராத தமிழக மீனவர் பிரச்சினை.. திமுக, காங்கிரஸே மூலக் காரணம்.. மறைமுகமாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share