எல்லாவற்றிலும் இந்தி இந்தி.. ஆதங்கத்தை கொட்டி தீர்த்த சு.வெங்கடேசன்..!
ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தியில் எழுதப்பட்டிருப்பதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் ஆங்கில பாடப்புத்தகங்களில் இந்தி தலைப்புகள் இடம்பெற்றுள்ளதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. கேரள மாநில கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி உள்ளிட்டோரும் கண்டத்தை பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் எம்.பி. சு.வெங்கடேசன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்ஸ் ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி! ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி! என்.சி.இ.ஆர்.டி. துவங்கி எம். பி.களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு.
இதையும் படிங்க: தமிழ் எழுத்துக்கள் முற்றிலும் புறக்கணிப்பு: நெல்லை தபால் பெட்டிகளில் இந்தி எழுத்துக்கள்..!
இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா? என சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: இந்தி திணிப்பின் முதல் போராளி பெரியார்..? வரலாறே தெரியாமல் உதயநிதியின் உருட்டல் பேச்சு..!