ஓபிஎஸ் சொன்ன ஒற்றை வார்த்தை - ஆடிப்போன ஈபிஎஸ்...!
பிளவுபட்ட அதிமுக ஒன்று பட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம் தலைவர்களின் படம் இல்லாத நிலையில் அந்த எண்ணத்தை செங்கோட்டையன் பிரதிபலிக்கிறார் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பிளவுபட்ட அதிமுக ஒன்று பட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம் தலைவர்களின் படம் இல்லாத நிலையில் அந்த எண்ணத்தை செங்கோட்டையன் பிரதிபலிக்கிறார் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஓபிஎஸ் ஆறு மாதம் அமைதியாக இருந்தால் கட்சியில் இணைத்து கொள்வோம்? என எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நான் அமைதியாக இருக்க வேண்டும் என்று சொன்னார்களா..? என்ன காரணத்துக்காக அவர் சொன்னார் என்று தெரியவில்லை. இந்த பிரச்சனை யாரால் உருவாக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். எந்த சூழ்நிலையிலும் கட்சி பிரிந்து இருக்கின்ற அதிமுக சக்திகளை ஒன்றிணைய வேண்டும் என்று தான் நான் சொல்கிறேன்.
என்னை அழைத்துக் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என சொல்லவில்லை. எனக்காக அவர் சிபாரிசு செய்கிறார் என்று சொல்கிறார் எனக்காக யாரும் பரிந்து பேசத் தேவையில்லை என்றார். பிரிந்து கிடக்கின்ற அதிமுகவை இணைந்து செயல்பட்டால் தான் இனிவரும் காலங்களில் எந்த தேர்தல் வந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்கின்ற சக்தி உருவாக்க வேண்டும் என்றுதான் சொல் கொண்டிருக்கிறேன்.எனக்கு சிபாரி செய்கின்ற நோக்கத்தில் அவர் பேசுகிறார்.
இதையும் படிங்க: அதையெல்லாம் சொன்னால்… எடப்பாடியாரின் டீமுக்கு ஓ.பி.எஸ் மிரட்டல்..!
எங்களை அழைத்துக் கொண்டு போய் பேச வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை சொல்லவும் மாட்டோம் எனத் திட்டவட்டமாக தெரிவித்தார். முன்னாள் அதிமுக MP ரவீந்திரநாத் பற்றி தெரியாது என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியது? உதயகுமார் எங்களைப் பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். டாக்டர் வெங்கடேசன் வீட்டில் எனது மகனுக்கு பேரவையில் மாவட்ட பதவி வழங்க கூறிய போது எங்கே உட்கார்ந்தார் என்று சொன்னால் அது அரசியல் அநாகரிகம்.
தேர்தலுக்கு முன் மீண்டும் தொண்டர்களை சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களை சந்திக்க செல்ல உள்ளதாக தெரிவித்தார். மெகா கூட்டணி அமைத்து வரும் தேர்தலில் வெற்றி பெறுவோம் என எடப்பாடி கூறியதற்கு சிறுத்தப்படியே பதில் சொன்ன அவர்,
நல்ல நகைச்சுவை எம்ஜிஆர் இறந்த பின்பு இரண்டு அணியாக பிரிந்தோம். தலைவர்கள் ஒன்று சேர்வதற்கு முன்பு தொண்டர்கள் ஒன்று சேர்ந்து விட்டார்கள். அதை பார்த்து தான் தலைவர்களே ஒன்று சேர்ந்தார்கள். இணையாமல் வெற்றி பெற முடியாது என்பதுதான் மக்களின் 11 தேர்தல்களின் தீர்ப்பு.மக்களின் எண்ணம் என்றார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், இரண்டு முறை அமைச்சர் ஏழுமுறை சட்டமன்ற உறுப்பினர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மாவிடம் மிகுந்த பற்று கொண்டவர்
. அதிமுக இரண்டு தலைவர்களின் படங்கள் இல்லை என்று சொன்னால் தொண்டர்கள் வெதும்பி கொண்டிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடே செங்கோட்டையனின் செயல்பாடு எனக்கூறினார்.
இதையும் படிங்க: விஜய்யை பாஜக வளைத்தால்... விஜய்யை மறைமுகமாக எச்சரிக்கும் கே.பி. முனுசாமி..!