பாடநூல் கழகத்தில் முறைகேடு.. மதுரை மண்டல அதிகாரி டிஸ்மிஸ்..
தமிழ்நாடு பாடநூல் கழக மதுரை மண்டல அதிகாரி முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கக்கூடிய தமிழ்நாடு பாடநூல் கழகம் தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாடக புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை அச்சடித்து வழங்கி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 22 இடங்களில் பாடபுத்தகடங்குகள் இயங்கி வருகின்றன.
இந்த 22 அலுவலகங்களில்லும் தனித்தனியாக ஒவ்வொரு மண்டலத்திற்கும் மண்டல அலுவலர் மற்றும் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மண்டலகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாடபுத்தகங்களை தனியார் பள்ளிகளுக்கு மண்டல அதிகாரி விற்பனை செய்து பல்வேறு மாவட்டங்களில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது.
குறிப்பாக மதுரை மண்டலத்தில் பணிபுரியும் பெண் அலுவலர் மீது மற்றொரு முறைகேடு புகார் இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய அதிகாரிகள், மதுரை மண்டல அதிகாரியை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: சேலத்தில் குவியும் பண மோசடி வழக்குகள்.. கதறும் மக்கள்.. விசாரணையை தீவிரப்படுத்திய போலீஸ்..!
இவருடன் இது மட்டும் இன்றி சென்னை தரமணியில் இயங்கி வரும் பாடநூல் கழக மண்டல அலுவலர், திருவள்ளூர் மற்றும் திண்டுக்கல் மண்டல அலுவலர்கள் உள்ளிட மூன்று மண்டல அலுவலர்கள் மீதும் முறைகேடு புகார் எழுந்த நிலையில் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு மூவரையும் தமிழ்நாடு பாடநூல் கழகம் பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ராமதாஸ் பற்றவைத்த நெருப்பு..! கெட்டியாக பிடித்துக் கொண்ட பிஜேபி...!