×
 

டிவி சத்தத்தால் அரங்கேறிய விபரீதம்.. கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபருக்கு வலைவீச்சு..

கோவையில் டிவி சத்தம் அதிகமாக வைத்து அட்டகாசம் செய்ததை தட்டி கேட்ட நபரை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் செட்டிபாளையம் அருகே சிமெண்ட் மற்றும் கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் திண்டுக்கலை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் ஆறுமுகம் இந்த வேலையில் சேர்ந்த நிலையில், கட்டிடப் பொருட்களை வீடுகளில் விநியோகம் செய்யும் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இதே கடையில் கேரளாவை சேர்ந்த ஷ்யாம் என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளனர். ஆறுமுகம் மற்றும் ஷியாம் கடையின் மேல் பகுதியில் உள்ள ஒரு அறையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று இரவு வழக்கம் போல் இருவரும் அறையில் மது அருந்திவிட்டு படுத்துக் கொண்டிருந்தபோது ஷாம் டிவியில் அதிகமாக சத்தம் வைத்து பார்த்ததாக கூறப்படுகிறது. இதில் எரிச்சலடைந்த ஆறுமுகம் டிவி சத்தத்தை குறைக்குமாறு ஷ்யாம்மிடம் கூறியுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. ஆத்திரமடைந்த ஷியாம் வீட்டில் கடந்த காலி பாட்டிலை எடுத்து ஆறுமுகத்தின் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைந்துள்ளார். 

இதையும் படிங்க: காரைக்குடியில் அரங்கேறிய பயங்கரம்.. பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை.. 

ஆறுமுகத்தின் அலறல் சத்தம் கேட்டு ஒன்று திரண்டு அக்கம்பக்கத்தினர் கட்டிட உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதற்கிடையில் சியாம் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆறுமுகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

தொடர்ந்து ஆறுமுகத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு வரை இந்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தப்பியோடிய ஷ்யாம் கிடைத்தால் தான் கொலைக்கான உண்மை காரணம் தெரியவரும் என போலீசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் தான் வேலைக்கு சேர்ந்த ஷியாம் கொலை செய்துவிட்டு தப்பியுடைய சம்பவம் பகுதி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் ரவுடி கொலை.. 2 சிறுவர் உள்பட 6 பேர் கைது..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share