×
 

இது டீச்சர் வீடு இல்லையா? வீடுமாறி திருடப்போன கொள்ளையர்கள்.. இருப்பதை சுருட்டிக் கொண்டு ஓட்டம்..!

சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நத்தக்கரை என்னுமிடத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி ஏழரை பவுன் தங்க நகை, 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த முகமுடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நத்தக்கரை வடக்குக்காடு என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் அமராவதி [ வயது 52 ] என்பவர் தனியாக வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கார் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். இன்னிலையில் நேற்று வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்ற அமராவதி, கதவை உள் தாழிட்டு தூங்கியுள்ளார்.

பின்னர் இரவு சுமார் ஒரு மணியளவில் வீட்டின் கதவை யாரோ தட்டுவது போல் இருந்துள்ளது. உடனே கதவை உடைத்து விட்டு உள்ளே புகுந்த முகமுடி கொள்ளையர்கள் தனியாக இருந்த அமராவதியை தாக்கினர். அதன் பிறகு அமராவதியை கத்தியை காட்டி மிரட்டி, வீட்டில் உள்ள பணம், நகை அனைத்தையும் எடுத்து வந்து கொடுக்கும் படி தெரிவித்துள்ளனர்.

அமராவதியும் உயிர் பயத்தில் வீட்டின் பிரோவில் இருந்த ஏழரை பவுன் தங்க நகை மற்றும் 25 ஆயிரம் ரொக்கம் பணத்தை அத்தனையு கொண்டு வந்து கொள்ளையர்களிடம் கொடுத்துள்ளார். பணத்தை பார்த்த கொள்ளையர்கள், வங்கியில் இருந்து எடுத்து வந்த 30 இலட்ச ரூபாய் பணம் எங்கே என கேட்டுள்ளனர்.

அதற்கு அமராவதி என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறியுள்ளார். சந்தேகம் அடைந்த கொள்ளையர்கள், இது டீச்சர் வீடு தானே? நேற்று வங்கியில் இருந்து 30 லட்சத்தை நீ எடுத்தாய் தானே? எங்கே அது? கொண்டு வா என மிரட்டியுள்ளனர். அதற்கு அமராவதி நான் கார் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறேன். என்னிடம் அவ்வளவு பணம் இல்லையென தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்த பொருட்களை விமானங்களில் எடுத்துச் செல்ல முடியாது.. வெளியான முக்கிய அப்டேட்!!

அதற்கு கொள்ளையர்கள் இது டீச்சர் வீடு இல்லையா? தவறுதலாக உன் வீட்டிற்கு வந்து விட்டேன்.. மன்னித்து விடுங்கள்.. என கூறி உள்ளனர். பின்னர் கொள்ளையர்கள் அமராவதி வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டனர். அமராவதியை வீட்டினுள் உள்ள தனியறையில் அடைத்து வைத்தனர்.

அதன் பின்னர் கொள்ளையடித்த பொருட்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அதிகாலையில் அமராவதியில் செல்போன் சுச்சாப்பாகி இருந்ததோடு வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரார் குணசேகரன் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். 

அப்போது தான் அமராவதியை வீட்டினுள் அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் அமராவதியை மீட்ட அப்பகுதி மக்கள் தலைவாசல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர்.

அமராவதி தெரிவித்த அடையாளங்களின் அடிப்படையில் 4 முகமுடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு செந்தாரப்பட்டியில் ஓய்வு பெற்ற விஏஓ,வீட்டிலும் முகமுடி அணிந்து வந்த இரண்டு கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி நகை,மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வங்கியில் நகை அடகு வைக்கப்போறீங்களா? - பேங்க் மேனேஜர் பார்த்த உள்ளடி வேலை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share