×
 

மகாராஷ்டிரா அமைச்சர் தனஞ்சய் முண்டே ராஜினாமா; மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கொலையில் தொடர்பா..?

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கொலையில் தொடர்பு இருப்பதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில அமைச்சர் தனஞ்சய் முண்டே பதவியை ராஜினாமா செய்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உணவு மற்றும் குடிமை பொருட்கள் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் தனஞ்சய் முண்டே. தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் பீட் மாவட்டத்தின் பார்லி தொகுதி எம்எல்ஏ மட்டுமல்ல மாவட்டத்தின் காவல் அமைச்சராகவும் இருந்து வந்தார்.

பீட் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக எழுந்த தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார் ராஜினாமா கடிதத்தை முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அவர் கொடுத்தார். 

முதல்வரின் தனிச்செயலாளர் பிரசாந்த் பாம்ரே மற்றும் சிறப்பு பணி அதிகாரி பிரசாந்த் ஜோஷி மூலம் முதல்வரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்த கடிதம் வழங்கப்பட்டது. முன்னதாக அமைச்சர் பொறுப்பில் இருந்து முன்பே விடுவிக்கப்பட்டதாக முதலமைச்சர் சட்டமன்ற வளாகத்தில் அறிவித்திருந்தார். 

இதையும் படிங்க: 6 வயது சிறுமி கொடூர கொலை.. மலையடிவாரத்தில் உடல்.. போலீஸ் வளையத்துக்குள் சிக்கிய சிறுவன்..!

கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் பீட்ப்ௌைன பஞ்சாயத்து தலைவர் சந்தோஷ் தேஷ்முக் கொலை பின்னணியில் மூளையாக செயல்பட்டவர் அமைச்சர் முண்டேயின் நெருங்கி உதவியாளர் வால்மிக் கரட் என்று தகவல் வெளியானது. அது தொடர்பான சர்ச்சை அதிகரித்து வந்த நிலையில் இப்போது  தனது ராஜினாமா வடிவத்தில் கொடுத்திருக்கிறார். 

இந்த கொலை தொடர்பான காணொளிகளும் திரைக்காட்சிகளும் இணையத்தில் வெளியாகி வைரலானால் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவருக்கும் உள்ள உறவுகள் குறித்து மேலும் சர்ச்சை எழுந்தது. அமைச்சர் தனது ராஜினாமாவை சமர்ப்பித்த பிறகு கொலை தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார் . 

அதில் பீட் மாவட்டத்தில் உள்ள மசாஜ் ஜோக்கை சேர்ந்த சந்தோஷ் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கு. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மிக கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே முதல் நாளில் இருந்து எனது உறுதியான கோரிக்கையாக இருந்து வருகிறது. நேற்று வந்த புகைப்படங்களை பார்த்ததும் எனது மனம் மிகவும் வேதனை அடைந்தது இந்த வழக்கின் விசாரணை முடிந்து விட்டதாகவும் இந்த விவகாரத்தில் நீதி விசாரணை நடத்த முன்மொழியப்பட்டு உள்ளதாகவும் முன்பே மேலும் தெரிவித்தார். 

அவர் தனது ராஜினாமா கடிதத்தை எழுதி விட்டு "எனது விவேக உணர்வை நினைவு கூர்ந்து கடந்த சில நாட்களாக எனது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை கருத்தில்கொண்டு அடுத்து சில நாட்களுக்கு சிகிச்சை பெறுமாறு மருத்துவர்கள் எனக்கு அறிவுறுத்தி உள்ளனர். எனவே மருத்துவ காரணங்களுக்காகவும் அமைச்சரவையில் எனது அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமாவை முதலமைச்சரிடம் கொடுத்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

முண்டேயிடம் ராஜினாமாவைவை கோரும் முடிவு நேற்று இரவு முதல்வர மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான துணை முதல்வர் அஜித் பவர் இடையே நடந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

முண்டேவை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்க தாமதம் செய்வதற்கும் பஞ்சாயத்து தலைவர் குடும்பத்திற்கு நீதி வழங்க தவறியதற்கும் மகாராஷ்டிரா அரசை உத்தம்தாக்கரே பிரிவு சிவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே விமர்சித்திருக்கிறார்‌. இது போன்ற சூழ்நிலையில் அரசாங்கத்தை பிஸ்னஸ் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: லீக் ஆன கொலை புகைப்படங்கள்… முதல்வருக்கு அழுத்தம்… அமைச்சர் ராஜினாமா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share