சொத்து குவிப்பு வழக்கில் மீண்டும் சிக்கிய துரைமுருகன்.. ஆப்பு வைத்த ஐகோர்ட்..!
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் ஆறு மாத காலத்திற்குள் விசாரணையை முடித்து வைக்க உத்தரவிடப்பட்டது.
கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆண்டுகளில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி 2002இல் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அமைச்சர் துரைமுருகன் அவரது மனைவி மகன் மருமகள் மற்றும் சகோதரர் மீது தொடரப்பட்ட வழக்கில் 2007 ஆம் ஆண்டு அவர்களை விடுவித்து வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து 2013 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகைகள் விளக்கி வாதிடப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி லஞ்ச ஒழிப்புத்துறை மறு ஆய்வு மனுவை ஏற்று அமைச்சர் துரைமுருகன் மற்றும் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்
இதையும் படிங்க: யாரு நாங்க துரோகியா? தைரியம் இருந்தா அதிமுகவை பேச சொல்லுங்க பார்ப்போம்.. சீறிய துரைமுருகன்..!
மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவின் அடிப்படையில், துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக விசாரணையை துவங்கி, ஆறு மாதங்களில் முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: நானே இப்படி பண்ணிட்டேனே..! மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த துரைமுருகன்..!