பெண்களுக்கு பாதுகாப்பு இல்லன்றது பச்சை பொய்.. கொந்தளித்த கீதா ஜீவன்..!
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் கூறுவது பச்சை பொய் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எதிர் கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஈதா ஜீவன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் பெண்கள் அதிக அளவு வளர்ச்சி அடையும் போது அதனை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.
அதனால் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு நாடகங்களை போட்டதாகவும், ஆனால் அவற்றில் தோற்று தான் போனார்கள் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: அண்ணாமலை சொல்லறதுக்கு எல்லாம் கவலைப்பட முடியுமா..? - அதிமுக நெத்தியடி...!
திராவிட மாடல் அரசு பெண்களை ஏமாற்றி விட்டது போல சொல்வதாகவும் 1.15 கோடி மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள், பன்னிரண்டாம் வகுப்பு வரை கல்வி உதவித் தொகை என பல்வேறு திட்டங்களை திராவிட அரசு கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
இன்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் ஸ்டாலின் அவர்களும் உயர் கல்வி பயில பல்வேறு உதவிகளை செய்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், பெண்களின் வாழ்வாதாரம் உயர எண்ணற்றத் திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்துள்ளதாக கூறினார்.
மத்திய பிரதேசம், கர்நாடகா, சிக்கிம் என பல்வேறு மாநிலங்களில் கூட மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை பின்பற்றி அமல் படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், பெண்கள் பாதுகாப்பில் எந்த சமரசத்திற்கும் இடம் தராமல் முதலமைச்சரை செயல்படுவதாக கூறினார்.
இதையும் படிங்க: கலைஞரின் கோட்டாவில்தான் தமிழிசை எம்.பி.பி.எஸ் படித்தார்.. ஆர்.எஸ்.பாரதி..!