அடுத்தது நாமளா இருந்திடக்கூடாது... பொன்முடியைப் பார்த்து புத்தி வந்த மா.சு... அரசு மருத்துவமனைக்கு சர்ப்ரைஸ் விசிட்!
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென்று சர்ப்ரைஸ் விசிட் அடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ5.90 கோடி மதிப்பீட்டில் 15 இடங்களில் புதிய மருத்துவ கட்டிடங்கள் மற்றும் கட்டண படுக்கை பிரிவு திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கன்னியாகுமரியில் நேற்று தங்கியிருந்தார். இன்று காலையில் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென்று சர்ப்ரைஸ் விசிட் அடித்தார்.
அங்கு பணியில் உள்ள டாக்டர் மற்றும் ஊழியர்களிடம் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து அங்கு தங்கியிருந்த நோயாளிகளிடம் அடிப்படை கட்டமைப்பு வசதி, சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார். அமைச்சரின் திடீர் விசிட்டால் கூடங்குளம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: அரசு நிகழ்ச்சிக்கு அடாவடி வசூல்... இன்று மாலைக்குள் கெடு விதித்த மா.சுப்பிரமணியன்..!
விலைமாது குறித்த சர்ச்சை பேச்சை அடுத்து அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது. திமுக துணைப்பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பொன்முடியை தூக்கியடித்துவிட்டு, திருச்சி சிவாவை அமர வைத்திருக்கிறது அறிவாலயம். இது மற்ற அமைச்சர்களுக்கு எச்சரிக்கை அலாரம் அடித்தது போல் மாறிவிட்டது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதனை உறுதிபடுத்துவது போல் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் நடவடிக்கை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தென்காசி மாவட்டம் இளத்தூரில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்த அரசு விழாவிற்காக மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தும் 10 ஆயிரம் வீதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும் மருத்துவர் ஒருவர் பேசும் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மகனை பறிகொடுத்த பாரதிராஜா..! நேரில் ஓடோடி சென்று ஆறுதல் சொன்ன முதல்வர்..!