டெல்டாவுக்கு ரூ.58 கோடி... வேளாண் பட்ஜெட் தாக்கல்!!
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் துறை சார்ந்த பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.
2025-2026ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 9.30 மணிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை தொடங்கினார். ஒவ்வொரு துறை சார்ந்து நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. நேற்று மட்டும் சுமார் 2.40 நிமிடங்கள் பட்ஜெட் உரை சார்ந்த புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் 2025-2026ம் ஆண்டுக்கான வேளாண்மை துறை சார்ந்த பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று போல் இன்று காலை 9.30 மணியளவில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண்மை துறை சார்ந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்வதால் திமுக உறுப்பினர்கள் பச்சை துண்டு அணிந்து வந்து சட்டப்பேரவையில் பங்கேற்றனர். இதையடுத்து பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வாசிக்க தொடங்கினார்.
இதையும் படிங்க: விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுமா...? காத்திருக்கும் விவசாயிகள்..!
அப்போது 30 லட்சம் உழவர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், பயிர் கடன் ரூ.3.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். 2021-24 காலக்கட்டத்தில் 147 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் டெல்டா பாசன பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரியதில் பாசனப்பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்ததாகவும் பட்டியலிட்டார்.
கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு 215 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், வேளாண் சார்ந்த 431 இளைஞர்கள் தொழில் முனைவோராக மாறியுள்ளதாகவும், அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில் வேளாண் இயந்திரம் உள்ளிட்டவைகள் வழங்க ரூ.22.80 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, டெல்டா மாவட்டத்திற்கு சிறப்பு தொகுப்பு நிதியாக ரூ.58 கோடியும், டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு சிறப்பு தொகுப்பு நிதியாக ரூ.102 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்..! புதிய திட்டங்களை எதிர்நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்..!