×
 

ஐ.பெரியசாமிக்கு செக்..! அடுத்த விக்கெட்டா? அலறும் திமுக..!

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த போது அமைச்சர் ஐ பெரியசாமி, இரண்டு கோடி ரூபாய்க்கு மேல், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அமைச்சர் ஐ. பெரியசாமி, அவரது மனைவி சுசிலா, அவரது மகன்கள் செந்தில்குமார் மற்றும் பிரபு ஆகியோர் மீது 2012 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் 4 பேரையும் விடுவித்து உத்தரவிடப்பட்டது.

பின்னர், வழக்கில் இருந்து விடுவித்த விசாரணை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய கோரி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.  இந்த மேல்முறையீட்டு மனதை விசாரித்த நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தார். லஞ்சம் ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகை நகல்களை விளக்கி வாதிட்டது.

இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு செம்ம ட்ரீட்... சட்டசபையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர்...

பிறகு தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ. பெரியசாமி, அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமார் மற்றும் பிரபு ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்வதாகவும், ஆறு மாதத்தில் விசாரணை நடத்தி வழக்கை முடிக்க வேண்டும் எனவும் திண்டுக்கல் மாவட்ட எம்.பி மற்றும் எம்.எல்.ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஏழு மாதங்களுக்கு பிறகு மீண்டும் அமைச்சரவையில் ரீஎண்ட்ரி.. மனோ தங்கராஜூக்கு என்ன துறை?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share