அடுத்த முறையும் ஸ்டாலின் தான் CM... அடித்து சொல்லும் அமைச்சர்..!
மாநில அரசுகளின் உரிமைகளை மீட்கவே உயர்நிலை குழுவை அமைத்துள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கல்வித்துறைக்கான நிதி, 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு தற்போது வரை நிதியை விடுவிக்கவில்லை என தெரிவித்தார்.
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என கூறிய அவர், வஞ்சிக்கப்படுவதில் இருந்து மீள்வதற்காகவும், மாநில அரசுகளின் உரிமைகளை மீட்டெடுக்கும் வகையிலும் உயர்நிலை குழுவை முதலமைச்சர் அமைத்துள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: பாஜகவின் அடியாள்தான் அமலாக்கத்துறை.. முதுகெலும்பில்லாத கோழை என விளாசிய ரகுபதி..!
மேலும் அடுத்த ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் என்றும் இரண்டாவது முறையாக ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்பார் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: சுயாட்சி முடிவு முற்றிலும் தவறு.. சட்டசபையில் இருந்து பாஜக வெளிநடப்பு..!