×
 

இல்லத்தரசிகளுக்கு குஷியான அறிவிப்பு... இனி வீடு நேரடி விநியோகம்... தமிழக அரசு அதிரடி...!  

தமிழ்நாட்டில் வீடுகளுக்கு நேரடியாக சென்று நியாய விலைப் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் வீடுகளுக்கு நேரடியாக சென்று நியாய விலைப் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

இன்றைய சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன், தமிழகத்தில்  இல்லம் தேடி பொருட்களை விநியோகிக்கும் திட்டத்த கொண்டு வருவது தொடர்பாக  கேள்வி எழுப்பினார். தங்களுடைய தொகுதிகளில் உள்ள பெரும்பாலான மக்கள் வேலையை முடித்துவிட்டு மாலை அல்லது இரவு நேரத்தில் தான் வீடு திரும்புகிறார்கள். இதனால் ரேசன் பொருட்களைப் பெறுவதில் சிரமம் இருக்கிறது. எனவே வீட்டிற்கு கொண்டு வந்து கொடுக்க அல்லது வீட்டிற்கு அருகே இருக்கக்கூடிய மளிகை கடையில் எப்படி எந்த நேரமானாலும் பொருட்களை வாங்கிக்கொள்கிறோமோ? அதேபோல் அரிசி, சர்க்கரை போன்ற ரேசன் பொருட்களை வாங்கிக்கொள்ளும் அமைப்பௌ உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

இதையும் படிங்க: ரேஷன் துறையில் ரூ.992 கோடி ஊழலா..? லிஸ்ட் போட்டு மறுக்கும் அமைச்சர் சக்கரபாணி.!

இதற்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதிலளித்தார். அப்போது, ஆந்திரா நகரப் பகுதிகளில் வீடுகளுக்குச் சென்று பொருள்களை வழங்கின்ற திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. நாளை தமிழக அரசின் உணவுத்துறை அதிகாரிகள் ஆந்திரா, தெலுங்கானா மற்ற பல்வேறு மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள  நியாய விலைக்கடைகள் மற்றும் அதன் பொது விநியோக திட்டத்தினுடைய செயல்பாடுகளை பற்றி ஆராய்ந்து அறிக்கை தரவுள்ளனர்.  

அங்கு எப்படி ரேசன் பொருட்களை இல்லம் தேடி கொண்டு சென்று சேர்க்கிறார்கள்?  அங்கு இருக்கக்கூடிய மக்கள்  ரேஷன் பொருட்களை எப்படி எளிமையாக பெற்றுக் கொள்கிறார்கள்? என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிபார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில் நடமாடும் ரேசன் கடை திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனத் தெரிவித்தார். 

இதையும் படிங்க: பழைய காற்றாலைகளை அகற்ற திட்டம்.. மின்வாரியத்தில் தனியார்மய நாட்டமா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share