×
 

நாங்க பி.எச்.டி. தம்பி... நீ LKG விஜய்க்கு பதிலடி கொடுத்த சேகர் பாபு...!

எல்கேஜி, யுகேஜி பசங்களை போல மத்திய அரசும் திமுகவும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்னு விஜய் விமர்சித்திருப்பது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளித்துள்ளார்.

திமுக ஆட்சியினுடைய அவலங்கள் வெளிப்படக்கூடாது என்பதற்காகத்தான் முதலமைச்சர் துணை முதலமைச்சர் புதிய புதிய பிரச்சனைகளை உருவாக்கி மக்களை திசை திருப்புகிறார்கள் என நேற்று கோவையில உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருக்கிறார். அவர் வருகின்ற போதெல்லாம் தமிழகத்தில் ஏதாவது பிரச்சனையை உருவாக்கி திசை திருப்புவதாக அவர் நினைக்கிறார். இங்கே வந்தால் தமிழை விரும்புவேன் என்பார். உத்தரபிரதேசுக்கு போனால் நான் இந்தியை விரும்புகிறேன் என்கிறார். இப்படி இரட்டை நாக்கைக் கொண்டவர்களுடைய பேச்சுக்கெல்லாம் தமிழக மக்கள் செவி சாய்க்க மாட்டார்கள்.

புதிய, புதிய பிரச்சனைகளை தமிழக முதல்வரும் துணை முதலமைச்சரும் எப்படி உருவாக்குகிறார்கள் என்றால், மக்கள் பயனடைகின்ற மக்கள் நல திட்டங்களுக்காக புதிய புதிய பிரச்சனைகளை கையில் எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். உறவுக்கு கை கொடுப்பவர்கள், உரிமைக்கு தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் தமிழக முதல்வரும் துணை முதலமைச்சரும் அவர்கள் அதிலிருந்து என்னாலும் பின்வாங்க மாட்டார்கள். அதை தான் பிரச்சனை என்று உள்துறை அமைச்சர் கருதுகிறார். அந்த பிரச்சனயை திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட மாடல் அரசும் தொடர்ந்து செய்யும். 

எல்கேஜி, யுகேஜி பசங்களை போல மத்திய அரசும் திமுகவும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்னு விஜய் விமர்சித்திருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,  இது வந்து மக்களை ஏமாற்றக்கூடிய செயல். பல phd முடிச்ச கட்சிங்க இந்த கட்சி என்றார். சிவராத்திரி விழா எப்படி தமிழ்நாட்டில்  கோலாகலமாக நடந்தது. அதில் கூட எங்காவது பிரச்சனைகளை உருவாக்கலாம் என்று சங்கிகள் நினைத்து பார்த்தார்கள், ஆனால் எதையும் நடத்தமுடியவில்லை. 

இதையும் படிங்க: Work from Home கட்சி..! விஜய்க்கு கடைசிவரை வீடுதான்- விட்டு விளாசிய கி.வீரமணி..!

ஒரு திருக்கோயில் என்று ஆரம்பித்த இந்த சிவராத்திரி விழா இன்றைக்கு ஒன்பது திருக்கோயில் சார்பில் இந்து சமயத் துறையில் வெகு சிறப்பாக நடந்து முடிந்திருக்கின்றது. வருங்காலங்களில் இன்னும் அதிகப்படியாக இந்த சிவராத்திரியில் திருவிழாக்களில் திருக்கோயில் இணைத்துக் கொள்ளப்படும். தமிழகம் முழுவதும் இருக்கின்ற சிவன் கோயில்களில் வெகு விமர்சியாக இந்த திருவிழா நடந்தது. நான் கூட இரவெல்லாம் நம்முடைய தொலைக்காட்சிகளில் லைவை பார்த்துக் கொண்டிருந்தேன் அற்புதமான பட்டிமன்ற பேச்சாளர்கள் ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கலை சார்ந்த ஆன்மீகம் சார்ந்த நிகழ்ச்சிகளை கண்டு இரவு முழுவதும் கழித்துக் கொண்டிருந்தோம். மக்கள் பரிபூரணமாக சிவனருளையும் இந்த ஆட்சியின் மீது நம்பிக்கையும் மென்மேலும் வளர்த்துக் கொள்வார்கள்.

தமிழகத்தில் தேச விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது அடுத்த வருடம் இந்த ஆட்சி அகற்றி வரும் மத்திய உத்தர அமித் தேச விரோத சக்திகள் எப்பொழுதும் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கும் அதைப்பற்றி நாம் கவலைப்படவில்லை இது மக்களுக்கான ஆட்சி மக்களுக்கான கட்சி இது மக்களின் முதல்வர் தலைமையிலே செயல்படுகின்ற இந்த அரசு

எங்கும் எந்த வகையிலும் இனத்தால் மொழியால் மதத்தால் பிளவுபடுத்துகின்ற சூழல் வருகின்ற பொழுது இரும்பு கரம் கொண்டு அடக்குகின்ற முதல்வர் எங்களுடைய இரும்பு மனிதர் முதல்வர், ஆகவே இந்த ஆட்சி தேச விரோத ஆட்சி அல்ல தேசிய ஆட்சி எனத் தெரிவித்தார். 

இதையும் படிங்க: விஜய் சொன்ன 1967, 1977 ரிப்பீட்டு ஆகுமா.? அன்று அண்ணாவும் எம்.ஜி.ஆரும் எப்படி சாதித்தனர்.?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share