அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி... செந்தில் பாலாஜி ஆவேசம்....!
டாஸ்மாக் ரெ ய்டு விமர்சித்த
கோவை கற்பகம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், டாஸ்மாக்கில் ஊழல் நடக்கிறது என்றும், செந்தில் பாலாஜி என புத்த பிட்சுவா என்று பா.ஜ.க தலைவர் கூறுகிறார் என கே ள்வி எழுப்பப்பட்டது.,
அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசியல் கோமாளி உடைய கேள்விகளை, முன் வைக்காதீர்கள் என்று நான் ஏற்கனவே பத்திரிக்கையாளர்களிடம் கூறி இருக்கிறேன். அவர் ஒரு அரசியல் கோமாளி, அதில் மாறுபட்ட சிந்தனையே இல்லை. அவர் ஒரு நிலைப்பாட்டில் இருந்ததே இல்லை. காலையில் ஒரு செய்தி மதியம் ஒரு செய்தி இரவில் ஒரு செய்தி என, தெளிவான முடிவில் இருப்பது இல்லை. தெளிவான கருத்துக்களையும் அவர்கள் என்றும் முன் வைத்ததே இல்லை என்றார்.
நமக்கு இன்னும் செய்ய வேண்டிய திட்டங்கள் நிறைய இருக்கிறது, அவர்களைப் பற்றி பேசுவதற்கு எல்லாம் நேரம் இல்லை என்று கூறினார். இது மக்களுக்கான அரசு எல்லோருக்கும் எல்லாமும் என்று செயல்படக் கூடிய அரசு. முதல்வரின் பொற்கால அரசு, மக்களுக்கான நல்ல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்திக் கொண்டே இருக்கிறோம் என்று கூறினார்.
இதையும் படிங்க: டாஸ்மாக்கில் கை வைத்த ED.! பகீர் கிளப்பும் தில்லாலங்கடி: கூண்டோடு சிக்கும் திமுக புள்ளிகள்..!
தமிழகத்தில் பா.ஜ.க இல்லாமல் இல்லை என்ற நிலைமை வந்து விட்டது என்று கூறுகிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த செந்தில் பாலாஜி,சிலர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்க வேண்டும் என விரும்புவார்கள், பத்திரிக்கை தொலைக்காட்சிகளில், கருத்தை பதிவு செய்தால் அது செய்தியாக மாறும் என நினைப்பார்கள். அப்படி இருக்கையில் யார் மக்களுக்காக பணி செய்கிறார்கள் என்பது, மக்களுக்கே தெரியும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் நிர்வாகத்தின் கள்ள ஒப்பந்தம்… ரூ.50000 கோடி மோசடி..? ED ரெய்டின் பகீர் பின்னணி..!