×
 

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து!

இன்று தனது 72 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.1953 ஆம் ஆண்டு மார்ச் 1ம் தேதி முத்தமிழறிஞர் கலைஞர்-தயாளு தம்பதிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார் மு.க.ஸ்டாலின். ரஷ்யாவின் அதிபர் ‘ஜோசப் ஸ்டாலின்’ நினைவாக ஸ்டாலின் எனப் பெயர் சூட்டப்பட்டது.

தந்தையின் அரசியல்-கலை ஆளுமை காரணமாக, மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இளம் வயதிலேயே நாடகக்கலை மற்றும் அரசியலில் ஆர்வம் இருந்தது. அவர் நடித்த முதல் நாடகம் திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் அஞ்சுகம் நாடக மன்றம் நடத்திய முரசே முழங்கு என்ற நாடகமாகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக நல கருத்துக்களை வலியுறுத்தும் சில திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 

இதையும் படிங்க: கருணாநிதி மகனா.. பிரபாகரன் மகனா என பார்ப்போம்..! முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் சவால்..!

இன்று தனது 72 வது பிறந்த நாளை கொண்டாடும் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி தனது வலைதள பக்கத்தில் முதலமைச்சரின் மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் நீண்ட ஆயுளோடு நலமாக இருக்க வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், இளைஞரணி தான் என் தாய் வீடு என்று பெருமிதம் பொங்கச் சொல்லும் கழகத் தலைவர் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து தங்களை வழிநடத்த வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் ஆகியோர் வழியில் கழகத்தை வழிநடத்தி மக்களின் பேரன்பைப் பெற்று, திராவிட மாடல் நல்லாட்சி நடத்துவதுடன் மொழியுரிமை, மாநில உரிமை போன்றவற்றை வலியுறுத்தி இந்தியாவை நேசிக்கும் மகத்தான தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மிளிர்வதாக தெரிவித்துள்ளார். மக்கள் நலன் போற்றும் திராவிட மாடல் ஆட்சி, 2026-இல் மீண்டும் அமைந்து கழகத்தலைவர் அவர்கள் முதலமைச்சராகத் தொடர, இந்நன்னாளில் உறுதியேற்போம். தமிழ்நாடு போராடும்..தமிழ்நாடு வெல்லும்..என கூறியுள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் மும்மொழியை கல்வியை நடைமுறைப்படுத்தும் விதமாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரரான் மும்மொழியில் பிற்நத நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில், மும்மொழியில் வாழ்த்துகிறேன்... மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..Wishing the Honourable Chief Minister Thiru M.K. Stalin a very happy birthday! என தெரிவித்துள்ளார். இதே போல திமுக தொண்டர்களும், பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இதனிடையே தனது 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இனிப்புகள் வழங்கினார்.

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2025-26ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து முதலமைச்சரின் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவர் சேர்க்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதைதொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது, இந்தி திணிப்பை எதிர்ப்போம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதையடுத்து சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

இதையும் படிங்க: ஊடகத்தில் வாய்ச்சவடால் விடும் அண்ணாமலை அனைத்து கட்சி கூட்டத்திற்கு வந்து பேசட்டும்- முத்தரசன் விளாசல்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share