ஒரே விமாத்தில் வந்திறங்கிய மு.க.ஸ்டாலின், ஓ.பி.எஸ், விஜய் மகன் சஞ்சய்..! சேலத்தில் குவிந்த விஐபிகள்
பாமக கௌரவத் தலைவரும், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினருமான, ஜிகே மணியின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பல விஐபிகள் சேலத்துக்கு படையெடுத்துள்ளனர்.
சென்னையில் இருந்து சென்ற ஒரே விமானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் விஜய் சேதுபதி, விஜய் மகன் ஜேசன் சஞ்சய் உளிட்ட முக்கிய விஐபிகள் சேலத்தில் வந்திறங்கினர்.
பாமக சட்டமன்ற கட்சித் தலைவரும், அக்கட்சியின் கெளவரத் தலைவருமான ஜி.கே.மணியின் பேரன் டாக்டர் சேதுநாயக்- விலாம்பிகை திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர்கள் அனைவரும் பங்கேற்றனர். நாளை அவர்களது திருமணம் நடைபெற உள்ளது.
தனது பேரனின் திருமணத்திற்காக பா.ம.க கெள்ரவத் தலைவர் ஜி.கே.மணி பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை நேரில் சந்தித்தித்து அழைப்பிதழ் கொடுத்து வந்தார். அப்போது இது அரசியல் ரீதியாக பல்வேறு யூகங்களை கிளப்பியது. எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஜி.கே.மணி அழைப்பிதழ் கொடுத்த போது பாமகவில் அன்புமணிக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் கேட்டு ஜி.கே.மணியை ராமதாஸ் தூது அனுப்பியதாக சொல்லப்பட்டது.
அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுத்த போதும் இது கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளாக இருக்கும் என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், ஜி.கே.மணி கட்சியையும் தாண்டி அனைத்து கட்சி தலைவர்களுடனும் நட்பில் இருந்து வருகிறார். அந்த அடிப்படையில் இந்த திருமண விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து கலந்து கொண்டுள்ளார்.
அதேபோல். மேட்டூர் சட்டமன்ற உறுப்பினருமான, ஜிகே மணியின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பல விஐபிகள் சேலத்துக்கு படையெடுத்துள்ளனர். ஜி.கே மணியின் மகன் தமிழ் குமரன் லைகா ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். இதனால் ஏராளமான திரைத்துறையினருடன் நெருங்கிய நட்பு தமிழ்குமரனுக்கு உண்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் விஜய் அஜித் என அனைவருக்கும் தமிழ் குமரன் உடன் நல்ல தொடர்பு உண்டு.
இதையும் படிங்க: தமிழக காவலர்களுக்கு ஊதிய உயர்வு - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
அந்த அடிப்படையில் இந்த விழாவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜயின் மகனும் இயக்குனருமான சஞ்சய் ஜேசன்,நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் சேலம் வந்து சேர்ந்துள்ளனர்.
ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தை லைகா நிறுவனம்தான் தயாரிக்கிறது. அந்த வகையில் லைகா நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக உள்ள தமிழ்குமரனின் அண்ணன் மகன் திருமணத்தில் நட்பின் அடிப்படையில் மட்டுமே ஜேசன் சஞ்சய் கலந்து கொண்டுள்ளார். விஜய் அரசியலில் இருப்பதால் தனது சார்பில் தனது மகனை அனுப்பி வைத்து இருக்கிறார் என்கிற கதையெல்லாம் அவரவர் கிளப்பி விடும் யூகங்களே ...
இதையும் படிங்க: 3,192 ஆசிரியர்களுக்கு 8 மாதங்களாக நியமன ஆணை வழங்காதது ஏன்? அன்புமணி ராமதாஸ் கேள்வி..!