அரசு ஊழியர்களுக்கு செம ட்ரீட்..! பேரவையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்..!
சட்டப்பேரவையில் அரசு ஊழியர்களுக்கான ஒன்பது முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.
சட்டசபையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களுக்கான 9 அறிவிப்புகளை வெளியிட்ட பேசினார். அப்போது, அகில இந்திய அளவில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது எனக் கூறினார். அரசு பணியாளர்கள் ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்விக்கு தொழில்நுட்பக் கல்லூரிக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும் என்றும் கலை அறிவியல் கல்லூரிக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். அரசு ஊழியர்களுக்கு இரண்டு சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்றும் பொங்கல் போனஸ் சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியம் ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவித்தார். ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகை கால முன்பணம் நான்காயிரம் ரூபாயிலிருந்து 6000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் இந்த அறிவிப்புகளால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 8 லட்சம் பேர் பயனடைவார்கள் எனவும் தெரிவித்தார்.