×
 

பயணிகள் உடைமை பாதுகாப்பில் நவீனம்...சென்ட்ரல் ரயில் நிலையத்தில்  டிஜிட்டல் லாக்கர்- பூட்டு சாவி இனி தேவையில்லை

சென்னை சென்ட்ரலில் பயணிகளின் உடைமைகளை பாதுகாக்க புதிதாக நவீன டிஜிட்டல் லாக்கர் அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய டிஜிட்டல் லாக்கர் முறையில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது. 

செண்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் உடைமைகளை வைக்க முன்னர் லாக்கர் பூட்டு சாவி முறை  இருந்தது. ஆனால் அது பாதுகாப்பான ஒன்றாக இல்லை என பலமுறை புகார் வந்தது. தற்போது நவீன டிஜிட்டல் லாக் சிஸ்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த லாக்கர்கள் ஃபோன்செல் என்ற நிறுவனம் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இது பயணிகளின் உடைமைகளின் அளவைப் பொறுத்து சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான சுமார் 80 லாக்கர்களை அமைத்துள்ளது. 

இது ரயில் நிலையத்தில் உள்ள லாக்கர் அறைக்கு ஒரு டிஜிட்டல் மாற்றாகும். முன்பு தங்களது உடைமைகளை வைக்க பூட்டு சாவியை பயன்படுத்துவர். ஆனால் தற்போது இவை டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்கு இது பாதுகாப்பை உறுதி செய்யும். பயணத்தின் போது பொருட்களை சேமித்து வைப்பதை லாக்கர்கள் எளிதாக்குகின்றன .

இதையும் படிங்க: மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து: எரிந்து சாம்பலான கூடாரங்கள்..!

குறிப்பாக வேறு வேறு இடங்களுக்கு ரயிலில் செல்ல வேண்டும் என்றால், இடையில் சில மணிநேர நேர இடைவெளி இருக்கும் அப்போது அந்த நேர இடைவெளியில் இவற்றை பயன்படுத்தலாம். அதே போல் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரயில் நிலையத்திற்கு புதிதாக வருபவர்களுக்கு இந்த டிஜிட்டல் லாக்கர் உதவிகரமாக இருக்கும்.

லாக்கர்களை எவ்வாறு பயன்படுத்துவது..?  QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். லாக்கர் செயலி திறக்கும், நாம் கொண்டு வந்துள்ள பொருட்கள் அளவை பொறுத்து லாக்கர் அளவைத் தேர்வு செய்யவேண்டும். கால நேரம் இடத்தைத் தேர்வுசெய்யவும், பின்னர் தொகை காண்பிக்கப்படும். பணத்தை ஜிபே மூலம் செலுத்தலாம். பணம் செலுத்தப்பட்டதும் லாக்கர் எண்ணுடன் தனிப்பட்ட ஒடிபி உங்கள் தொலைபேசிக்கு அனுப்பப்படும். 

உடைமைகளை திறந்து வைக்க ஒடிபி குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும்.  லாக்கரைப் பூட்ட மீண்டும் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும். உங்களைத்தவிர யாராலும் அந்த லாக்கரை திறக்க முடியாது. குறியீடு எண் மறந்து போனாலோ, வேறு நபர்கள் கைகளுக்கு போனாலோ லாக்கரில் உள்ள பொருட்களுக்கு உத்தரவாதம் இல்லை. 

இதையும் படிங்க: உனக்கு எல்லாம் அறிவுன்னு ஒண்ணு இருக்கா...இல்லையா?.... விஜயை வெளுத்து வாங்கிய சீமான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share