பெற்ற மகனை பெட்ரோலால் கொளுத்திய தாய்.. திருவள்ளூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..
திருவள்ளூர் அருகே பெற்ற மகனை தாய் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் தொடுகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தி. இவர் அதே பகுதியில் இயங்கி வரும் தொல் தனியார் தொழிற்சாலையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். ஜெயந்தியின் மகன் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு பாரதி என்பவர் உடன் திருமணமாகி இரு குழந்தைகளுடன் தாய் ஜெயந்தியுடன் வசித்து வந்துள்ளார். நிலையில் கிருஷ்ணமூர்த்தி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து வீட்டில் கேட்கும் போது நான் எனக்கு வேலை கிடைக்கவில்லை என்று பதிலளித்து வந்துள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் பிசினஸ் செய்ய போவதாகவும் அதற்கு பணம் வேண்டும் என்றும் கிருஷ்ணமூர்த்தி ஜெயந்தி இடம் கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு ஜெயந்தி மறுத்த நிலையில் ஊதாரித்தனமாக பணத்தை செலவிடுவார் என்று அகதட்டியுள்ளார். இதனால் அவ்வப்போது தாய் மற்றும் மகனும் உன் இடையே சண்டை வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தி அவரது அம்மாவிடம் காலம் தாமத் தாழ்த்தாமல் விரைவில் பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதனால் ஜெயந்தி மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெயந்தி வீட்டில் இருந்த பெட்ரோல் எடுத்து கிருஷ்ணமூர்த்தி உடலில் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட சிசு.. கல்லூரி மாணவியின் வெறிச்செயல்..!
இதில் உடம்பெல்லாம் தீப்பற்றி வலி தாங்க முடியாமல் கிருஷ்ணமூர்த்தி அழவே சத்தம் கேட்டு ஓடி வந்த மனைவி பாரதி மற்றும் அக்கம் பக்கத்தினர் கிருஷ்ணமூர்த்தி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணமூர்த்தியை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். இது குறித்து கிருஷ்ணமூர்த்தியின் மனைவி பாரதி மப்பேடு போலீசில் புகார் அளித்துள்ளார். பாரதியின் புகாரியின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயந்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆட்டோவில் தவறிய I-Pad.. பத்திரமாக மீட்பு.. ஆட்டோ ஓட்டுநற்கு குவியும் பாராட்டுகள்..