×
 

நிர்மலா சீதாராமன் உயர்வுக்கு பெரியார் தான் காரணம்: இந்தியை எதிர்க்கவில்லை: கொளுத்தி போட்ட தயாநிதி மாறன் 

மத்தியில் ஆளும் பிரதமர் மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் தென் மாநிலங்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது, தமிழகம் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக இருந்தும் வஞ்சிக்கப்படுகிறது என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் காட்டமாகத் தெரிவித்தார்.

2025-26 மத்திய பட்ஜெட் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்து வருகிறது. மக்களவையில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் நேற்று விவாதத்தில் பங்கேற்றுப் பேசியதாவது, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தென் மாநிலங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டி நடத்துகிறது. பீகாரில் நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு அங்கு பாட்னா விமானநிலைய விரிவாக்கம், கோசி நிதி திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு என்ன திட்டங்கள் அறிவிக்கப்பட்டன
தமிழகத்திலும், கேரளாவிலும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால் அடுத்த பட்ஜெட்டில் ஒருவேளை சலுகைகளை மத்திய அரசு அறிவிக்கலாம். அவ்வாறு மத்திய அரசு திட்டங்களை அறிவித்தாலும், அவை வெறும் அறிவிப்புகளாகவே இருக்கும், தமிழ்நாட்டிற்கு எதுவும் வராது. கன்னியாகுமரி-திருவனந்தபுரம் பொருளாதார மண்டலம் இந்த பட்ஜெட்டிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அரசு தேசத்தின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு செய்தாலும், பெங்களூரு, சென்னை ஐடி முனையங்களுக்கு எந்த ஊக்கச் சலுகைகளும் இல்லை. சென்னை மெட்ரோ திட்டங்களுக்கும் எந்த நிதியுதவியும் அறிவிக்கப்படவில்லை. இந்தியாவில் வெற்றிகரமான மாநிலம் எதுவென்றால் அது தமிழகம்தான் ஏனென்றால் இந்த அரசு திராவிட மாடலை பின்பற்றுகிறது. நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் இல்லை, இந்தி திணிப்பை மட்டுமே எதிர்க்கிறோம்.

இதையும் படிங்க: "பட்ஜெட்டில், தமிழ்நாடு என்ற வார்த்தையே இடம் பெறவில்லை" : தயாநிதிமாறன் சாடல்

இன்று நிதிஅமைச்சர் நி்ர்மலா சீதாராமன் இத்தகைய உயரத்தை அடைந்ததற்கு ஒரே மனிதர் தந்தை பெரியார்தான் காரணம். இதை அவர் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. நரேந்திர மோடி அரசு தொடர்ந்து பட்ஜெட்டை தாக்கல் செய்தாலும், அது அரசியல் லாபத்தை மனதில் வைத்து, தேர்தலைக் கருத்தில்கொண்டே பட்ஜெட்டை தயாரிக்கிறது. கார்ப்பரேட்களுக்குத்தான் முக்கியத்துவம் பட்ஜெட்டில் வழங்கப்படுகிறது, சாமானியர்களுக்கு அல்ல.

அத்தியாவசியப் பொருட்களின் விலை  கடுமையாக உயர்ந்து வருகிறது, ஏழைகள், நடுத்தர் குடும்பத்தினர் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். இந்திய ரூபாயின் மதிப்பு குறித்து எதிர்க்கட்சிகள் பேசும்போதெல்லாம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையவில்லை, டாலர் மதிப்புதான் வலுவடைந்துள்ளது என்கிறார் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட் விவாதத்தின்போது ஏன் அவைக்கு அவர் வரவில்லை என்று கேள்வி எழுப்பினார். இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.

இதையும் படிங்க: மத்திய பட்ஜெட்டால் யாருக்கு பலன்? நடுத்தர குடும்பத்தினரா, கோடீஸ்வரர்களா? புள்ளிவிவரங்களை அடுக்கிய ப.சிதம்பரம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share