×
 

நடுங்க வைக்கும் கொலை சம்பவங்கள்! சென்னையில் இளைஞர் வெட்டி படுகொலை...

சென்னை பெரவள்ளூரில் இளைஞர் ஒருவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இளம் வயதினர் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையாகி தங்கள் வாழ்வையே தொலைத்து விடுகின்றனர். சமீபத்தில் கஞ்சா புழக்கம் இளம் சிறார்கள் இடையேயும் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதனை கட்டுப்படுத்துவது சற்று கடினமான விஷயமாகவே உள்ளது. 

அதிலும் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு பழிக்குப் பழி வாங்குவதும் நம்மால் பார்க்க முடிகிறது. அப்படியாக ஒரு விஷயம் தான் சென்னையில் நடந்துள்ளது. சென்னை பெரவள்ளூரில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். மது மற்றும் கஞ்சா போதையில் இளைஞர் குத்தி கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஆயுள் தண்டனையே போதும்..! எதிர்பார்க்காத உத்தரவை அளித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை..!

நேற்று இரவு பெரவள்ளூர் பகுதியில் உள்ள பூங்கா அருகே சந்துரு என்ற இளைஞர் மது அருந்துவிட்டு சென்றுள்ளார். அப்போது ஆட்டோவில் வந்த இரண்டு பேர் சந்துருவை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சந்துருவை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சந்துரு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதனை அடுத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சந்துருவை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய வினோத் உள்ளிட்ட இரண்டு பேரை வலை வீசி தேடி வருகின்றனர். மது மற்றும் கஞ்சா போதையில் இந்த கொலை சம்பவம் அரங்கேறி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முன் விரோதமா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனது நண்பரோடு மது அருந்து விட்டு சென்று இளைஞரை சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ஆசையாய் நூடுல்ஸ் வாங்கி வந்த கணவன்.. சண்டையிட்டு சாப்பிட மறுத்த மனைவி.. கழுத்தை நெறித்து கொன்ற விபரீதம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share