×
 

பூமியை நோக்கி வேகமாக வரும் 'சிட்டி டெஸ்ட்ராயர்' விண்கல்... வழியிலேயே தாக்கி அழிக்க "நாசா" திட்டம்..!

பூமியை நோக்கி வேகமாக வரும் விண்கல்லை அழிக்க நாசா திட்டமிட்டுள்ளது.

பூமியை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நாசகார விண்கல்லை நடு வலியிலேயே தாக்கி அழிக்க அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது. 130 முதல் 300 அடி அகலம் கொண்ட இந்த சிறிய கோள் ஒரு நகரத்தை தாக்கி லட்சக்கணக்கான மக்களை அழிக்கும் சக்தி கொண்டது என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்‌.

2024 YR4 என்று அழைக்கப்படும் இந்த விண் கல்லுக்கு நகரத்தையே அழிக்கக்கூடிய "சிட்டி டெஸ்ட்ராயர்" என்ற பெயரை அறிவியலாளர்கள் சூட்டி இருக்கிறார்கள். வருகிற 2032 ஆம் ஆண்டில் இந்தக் கல் பூமியை தாக்குவதற்கு 1.5 சதவீத வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க: பல்லடம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. போலீஸ் மீது போலீஸிடமே புகார் அளித்த மக்கள்.. விளக்கம் அளித்த எஸ்.பி..!

உலகம் முழுவதிலும் உள்ள விண்வெளி ஆய்வு மையங்கள் இதை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன. நாசாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையம் இதை கண்காணித்து நடு வழியிலேயே அதை திசை திருப்பி விடுவது அல்லது தாக்கி அழிப்பது என்ற முயற்சியில் இறங்கியுள்ளது. உலக அளவில் இது தொடர்பாக விஞ்ஞானிகள் விவாதித்து வருகிறார்கள் என்று நியூ யார்க் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னையை தாக்குமா ?

நாசா, சீனா ரோஸ் ,கோஸ் மோஸ் மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனங்கள் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் இந்த கோளின் பாதையை கண்காணித்து அதன் ஆபத்தை தவிர்ப்பது குறித்த பேச்சுவார்த்தையௌ தொடங்கி உள்ளன. அதன் பாதையை வரைபடம் ஆக்குவதற்கும் சாத்தியமான அபாயங்களை மதிப்பிடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

போகோட்டா லாகோஸ் அல்லது மும்பை உள்ளிட்ட உலகின் முக்கிய நகரங்களில் ஒன்றை இது தாக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த முறை இது பற்றிய செய்தி வந்த போது சென்னையையும் தாக்குவதற்கு வாய்ப்பு இருக்கலாம் என்று தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மிகவும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியில் இது மோதினால் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் ஆபத்தை சந்திக்க கூடும் என்றும் விஞ்ஞானிகள் மதிப்பிட்டு உள்ளனர். ஒருவேளை பாரிஸ், லண்டன் அல்லது நியூயார்க் மீது அது மோதுவதாக இருந்தால் அந்த முழு நகரமுமே காலி ஆகிவிடும் என்று பிளானட்ரி சொசைட்டியின் தலைமை விஞ்ஞானி ப்ரூஸ் பேர்ட்ஸ்  செய்தியாளரிடம் கூறினார். 

இந்த சிறிய கோளின் போக்கை மாற்றுவதற்காக நாசாவும் மற்ற நாட்டு மையங்களும் வெடி பொருட்களுடன் ஒரு ராக்கெட் அனுப்புவது அல்லது தாக்கத்தின் ஆபத்து அதிகமாக இருந்தால் அதை முற்றிலுமாக அழிப்பது பற்றி பரிசீலிக்க இருக்கிறார்கள். 

அதை அழிப்பது தான் எளிதாக இருக்கும் என்று உள்ள நாசா திட்ட மேலாளர் கூறினார். இதற்கு அதிக அளவில் வெடிபொருட்கள் கூட தேவை இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த விண்கல் முதலில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கண்டறியப்பட்டது.

இதையும் படிங்க: வேங்கையன் ஒத்தையில தான் வருவான்...! எவ்வளவு பேர் விலகினாலும் கெத்து காட்டும் சீமான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share