நெல்லையை அதிர வைத்த சம்பவம்.. அறிவாளால் வெட்டிய மாணவனுக்கு 14 நாள் காவல்..!
நெல்லையில் சக மாணவன் மற்றும் ஆசிரியரை அறிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் ஒரு மாணவன் சக மாணவனை அறிவாளால் வெட்டினார். இதில் அந்த மாணவனுக்கும் தடுக்கச் சென்ற ஆசிரியருக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அறிவாளால் வெட்டிய மாணவனை 14 நாட்கள் சீர்திருத்த குழுமத்தில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தகுதியான நபர்களைக் கொண்டு மாணவனுக்கு கவுன்சிலிங் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் சிறுவர் சீர்திருத்த குழுமத்தில் நீதித்துறை நடுவர் தலைமையில் மாணவனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாணவனுக்கு அரிவாள் வெட்டு.. புத்தகப் பைகளை சோதனை செய்ய பள்ளிகளுக்கு ஆணை..!
இதையும் படிங்க: பென்சிலுக்காக இப்படியா? 8ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு.. பள்ளிக்குள் கொலைவெறி தாக்குதல்..!