×
 

எமனாக மாறிய இ - பைக்.. பேட்டரி வெடித்து பெண் பரிதாப பலி..!

நெல்லையில் எலெக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்த விபத்தில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் இடையன்குடி அருகே ஆனைக்குடி பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ். ஆனைக்குடி கல்லறை தோட்டம் எதிரே உள்ள தோட்டத்தில் தேவதாசுக்கு சொந்தமான கோழிப்பண்ணை மற்றும் பன்றி பண்ணை உள்ளது. இங்கு தூத்துக்குடி மாவட்டம் இடைச்சிவிளையைச் சேர்ந்த 45 வயதான ஜான்சி பாப்பா என்பவர் தங்கி இருந்து பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் தேவதாசுக்கு சொந்தமாக இரண்டு எலக்ட்ரிக் பைக்குக்ள் உள்ள நிலையில் அந்த பைக்குகள் தோட்டத்தில் செட்டில் நிறுத்தப்பட்டு இருந்தன. தோட்டத்தில் கோழி முட்டைகள் காப்பதற்காக இன்குபேட்டர் எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. 

நேற்று இரவு இரண்டு எலக்ட்ரிக் பைக்களின் பேட்டரிகளும் சார்ஜ் ஏற்றுவதற்காக கழட்டி வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகின்றது. பாதி சார்ஜ் ஏற்றப்பட்ட நிலையில் மீதி சார்ஜ் காலையில் ஏற்றுக்கொள்ளலாம் என தேவதாஸ் இணைப்பை துண்டித்து வைத்தகாக தெரிவித்துள்ளார். இணைப்பை துண்டித்து விட்ட தேவதாஸ், சார்ஜரை எடுக்காமல் அங்கிருந்து சென்றுள்ளார். இந்நிலையில் அடுத்த நாள் காலையில் அங்கு பணிபுரியும் ஜான்சி பாப்பா இன்குபேட்டர் அமைந்துள்ள அறைக்கு முட்டைகளை சரிபார்க்க சென்றுள்ளார். வழக்கமாக தினமும் காலையில் முட்டைகள் பொரிந்தனவா? அவற்றில் நிலை என்னவென ஆராய செல்வது அவரது அன்றாக பணிகளில் ஒன்று. இந்நிலையில் அவ்வாறு பணி விசயமாக இங்குபேட்டர் வைத்திருந்த அறைக்குள் அவர் சென்றுள்ளார்.

இதையும் படிங்க: ஆசை ஆசையாய் இருட்டுக்கடை அல்வாவை ருசி பார்த்த முதல்வர்... வாயில் போட்ட மறுகணமே கேட்ட அந்த கேள்வி...!

அவ்வாறு அவர் சென்றபோது சார்ஜ் போடாமல் இருந்துள்ள பேட்டரிகள் திடீரென வெடித்து சிதறியுள்ளது. பயங்கர சபத்த்துடன் பேட்டரிகள் வெடித்த இந்த விபத்தில் பணி பெண் ஜான்சி பாப்பா படுகாயம் அடைந்தார். சப்தம் கேட்டு அங்கு ஓடிவந்த மற்ற பணிபுரியும் ஊழியர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அட்மிட் செய்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஜான்சி பாப்பா கொண்டு செல்லப்பட்டார். 

இந்நிலையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜான்சி பாப்பா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து திசையன்விளை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் கோழிப்பண்ணையில் பணியாற்றி வந்து ஜான்சி பாப்பாவின் மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கட்சி தொடங்கியதுமே ஆட்சியைப் பிடிப்போம்... முதல்வராவோம் என்பதா..? விஜய்யை மறைமுகமாக அட்டாக் செய்த முதல்வர்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share