புதுசா பாஸ்போர்ட் எடுக்கப்போறீங்களா..! மத்திய அரசின் புதிய விதிகளை தெரிஞ்சுகோங்க..!
புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வோருக்கும், அதை அப்டேட் செய்வோருக்கும் புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.
பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வோர், அதை அப்டேட் செய்வோருக்கு புதிய விதிகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இதற்காக பாஸ்போர்ட் விதிகள் 2025ல் மாற்றம் செய்து, அதை அரசாணையிலும் மத்திய அரசு வெளியிட்டுள்ளதால், இந்த விதிகள் நடைமுறைக்குவிட்டன.
புதிய பாஸ்போர்ட் எடுப்பவர்கள், புதுப்பிப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிகள்:
1. இந்த புதியவிதியின் கீழ் 2023 அக்டோபர் 1ம் தேதிக்குப் பின் பிறந்தவர்கள், பிறந்த இடத்தின் நகராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கிய தங்களின் பிறப்புச்சான்றிதழை இணைக்க வேண்டும்.
இதையும் படிங்க: பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. வெளியான முக்கிய அறிவிப்பு.!!
2. 2023 அக்டோபர் 1ம் தேதிக்குப் முன் பிறந்தவர்கள் பிறப்புச் சான்று அல்லது உயர்கல்வி சான்றிதழ், பள்ளியில் வழங்கிய டிசி, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை பிறந்ததேதிக்கு ஆதாரமாக வழங்கலாம்.
3. வருமானவரித்துறை சார்பில் வழங்கப்பட்ட பான்கார்டை, பிறந்த தேதிக்கு ஆதாரமாக இணைக்கலாம்.
4. அரசு ஊழியர்கள் தாங்கள் இன்னும் அரசுப் பணியில் தொடர்கிறோம் என்பதற்கு ஆதாரமாக சான்று இணைத்தல்.
5. ஓய்வூதியம் ஆணை, அதில் பொறுப்பு அதிகாரியின் கையொப்பம் பெறப்பட்ட தங்களின் பிறப்புச் சான்றுக்கு ஆதாரமாக வழங்கலாம்.
6. மாநில அரசு வழங்கிய ஓட்டுநர் உரிமத்தில் குறிப்பிடப்பட்ட பிறந்த தேதியை பிறப்பு ஆதாரமாக அளிக்கலாம்.
7. தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை பிறந்த தேதிக்கு ஆவணமாக வழங்கலாம்.
8. எல்ஐசி அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் சார்பி்ல் காப்பீடு எடுத்தமைக்காக வழங்கப்பட்ட சான்றிதழை பிறப்புசான்று ஆவணமாகப் பயன்படுத்தி இணைக்கலாம்.
முகவரியை நீக்குதல்!
பாஸ்போர்ட்டின் பின்புறம், பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் வீட்டு முகவரி அச்சிடப்பட்டு முன்பு வழங்கப்படும். ஆனால் இனிமேல் பாஸ்போர்ட்தாரரின் தனிப்பட்ட உரிமையை கருத்தில் கொண்டு முகவரி அச்சிடப்படாது. அதற்குப் பதிலாக பார்கோடு மட்டுமே இருக்கும்.
பாஸ்போர்ட் வண்ணங்கள்!
பாஸ்போர்ட் இனிமேல் வண்ணங்கள் அடிப்படையில் வழங்கப்படும். இதன் மூலம் பாஸ்வோர்ட் வண்ணங்களை வைத்தே அதன் தரத்தை அறியலாம். சாராசரி குடிமகனுக்கு நீல நிறத்தில் பாஸ்போர்ட், அரசு அதிகாரிகளுக்கு வெள்ளை நிறத்தில் பாஸ்போர்ட், அரசு உயர்பொறுப்பு, தூதவர்கள் தரத்தில் இருப்போருக்கு சிவப்பு நிறத்தில் பாஸ்போர்ட் வழங்கப்படும்.
பெற்றோர் பெயர் நீக்கம்!
பாஸ்போர்டில் பாஸ்போர்ட் உரிமையாளரின் பெற்றோர் பெயர் கடைசிப்பக்கத்தில் முன்பு அச்சிடப்பட்டிருக்கும். ஆனால், இனிமேல் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் வகையில் பெற்றோர், குடும்பத்தினர் பெயர் அச்சிடப்படாது.
இதையும் படிங்க: இந்தியர்களுக்கு புதிய விசா வழங்கும் 16 நாடுகள்.. உடனே கிளம்ப வேண்டியது தான்.!!