×
 

ஊட்டி போறீங்களா? - நீலகிரி மாவட்ட ஆட்சியர் போட்ட உத்தரவ தெரிஞ்சிக்கோங்க! 

நீலகிரி மாவட்டத்தில் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு  தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் 2 பேருக்கு  HMPV வைரஸ் உறுதி செய்யபட்ட நிலையில் தமிழக - கர்நாடகா மற்றும் கர்நாடகா - கேரளா எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து வருவதாக நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். 

அண்டை மாநிலமான கர்நாடகாவில் 2 பேருக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அங்கு பெங்களூரில் 3 மாத, 8 மாத கைக்குழந்தைக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் கூட இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருக்கும், சென்னையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. 

இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு  தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறுகையில், நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிக்க குழுக்கள் அமைக்கபட இருப்பதாகவும், பொங்கல் தொடர் விடுமுறையின் போது கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு ..வேட்பளார் தேர்வு தீவிரம் ..!

 தற்போதைக்கு சுற்றுலா பயணிகள் வருகைக்கு எந்த வித கட்டுபாடும் இல்லை என்றும், HMPV தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் கட்டுபாடுகள் விதிக்கபடும் என்றார். HMPV தொற்று மட்டுமின்றி வழக்கமான காய்ச்சல் காலங்களிலும் நீலகிரி மாவட்ட மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் முகக்கவசம் கட்டாயமாக அணிவது நல்லது எனத்தெரிவித்தார். 
 

இதையும் படிங்க: விடுதி வளாகத்தில், மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்: உடன் படித்த மாணவர் கைது; நாடு முழுவதும் தொடரும் பாலியல் வன்கொடுமை அவலம்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share