×
 

கள்ளக்காதலுக்கு இடையூறாக கணவன்.. துபாயில் இருந்தபடியே தீர்த்துக்கட்டிய மனைவி.. கம்பி எண்ணும் கள்ளக்காதலன்..!

வாணியம்பாடி அருகே பள்ளி காவலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவியின் கள்ளக்காதலன் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியை சேர்ந்தவர் இஃர்பான். இவரது மனைவி ஹாஜிரா. துபாயில் வேலை செய்து வருகிறார். இர்ஃபான், இக்பால் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 7ம் தேதி காலை வீட்டிலிருந்து மிதிவண்டியில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்  இஃர்பானை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதில் நிலைகுலைந்து இர்பான், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இஃர்பானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலைச் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்க்கொண்டு வந்த நிலையில் தனியார் பள்ளி காவலாளி இர்பானை கொலை செய்து விட்டு தப்பி ஓடியது, திருப்பத்தூர் பக்கிரிதக்கா பகுதியை சேர்ந்த சல்மான் என்பது தெரியவந்தது. மேலும் இர்ஃபான் மனைவி ஹாஜிராவின் தங்கை கணவர் தான் சல்மான் எனவும் போலீசாருக்கு தெரியவந்தது.

எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் ஆத்து மேடு சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் இஸ்லாமிய மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளி காவலாளியை கொலை செய்துவிட்டு பெங்களூர் தப்பி ஓடிய சல்மானை பிடிக்க எஸ்.பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

இதையும் படிங்க: பள்ளி காவலாளி குத்திக்கொலை.. பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு.. வாணியம்பாடியில் பயங்கரம்..!

அவரது செல்போன் எண்ணை வைத்து பெங்களூரில் தணிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் வாணியம்பாடி அழைத்து வந்து காவல் நிலையத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இர்ப்பானின் மனைவி ஹாஜிராவுக்கும் அவருடைய தங்கை கணவர் சல்மானுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இது குறித்து சல்மானின் மனைவி திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது போலிசார் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசி அனுப்பி உள்ளனர். அதன் பின்னர் ஹாஜிராவை சல்மான் துபாய்க்கு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார். 

அப்போதிலிருந்தே இர்ப்பானுக்கும் சல்மானுக்கு இடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில் கடந்த சில மாதங்களாக வெளிநாட்டில் இருக்கும் ஹாஜிராவும், சல்மானும் நெருக்கமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் ஹாஜிராவின் 2 பெண், 1 ஆண் குழந்தைகளில் 2 குழந்தைகளை சல்மான் இடம் வளர வேண்டும் என்று ஹாஜிரா கூறி உள்ளார்.

ஹாஜிரா  இன்னும் 6 மாதங்களில் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியதும், சல்மான் உடன் வாழ திட்டமிட்டுள்ளார். இதனால் சல்மான், ஹாஜிராவின் 2 குழந்தைகளை அழைத்து வர இர்ஃபான் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இர்பான் குழந்தைகளை அனுப்ப மறுப்பு தெரிவித்துள்ளர். 

இதனால் ஆத்திரமடைந்த சல்மான், இர்ஃபானை தீர்த்துகட்ட முடிவு செய்து வாணியம்பாடிக்கு வந்துள்ளார். இர்ஃபான் தனியார் பள்ளிக்கு காவலாளி வேலைக்கு செல்லும் போது பின் தொடர்ந்து சென்று வழிமறித்து அவரை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து பெங்களூருக்கு தப்பி ஓடி உள்ளார். இது அனைத்தும் விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து வாணியம்பாடி நகர போலீசார் சல்மான் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். வாணியம்பாடியில் மனைவிக்கும் மனைவியின் தங்கை கணவருக்கும் இடையே இருந்து வந்த கள்ளக்காதலால் கணவர் கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும்  பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தங்கக்கட்டிகள் வழிப்பறி வழக்கு.. போலீஸ் தேடியவர் ஆடியோ வெளியிட்டு தற்கொலை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share