×
 

ஊட்டி மக்களுக்கு செம டிரீட்.. நீலகிரியில் ஒரு மினி டைடல் பார்க்..! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காக நீலகிரியில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

உதகையில் நவீன அரசு மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் என்ற திறந்து வைத்தார். இதை எடுத்து அரசு விழாவில் பங்கேற்று முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், உங்களுக்காக நன்மை செய்வதில் முதல் ஆளாக இருப்பது தாங்கள்தான் என்று தெரிவித்தார்.

அன்றைய ஆட்சியாளர்கள் தூக்கத்தில் இருந்த போது அவர்களை நீலகிரிக்கு வர வைத்ததே திமுக தான் என்றும் இந்தியாவிலேயே தமிழகம் மட்டும்தான் அசுர வேகத்தில் வளர்ந்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார். பொருளாதாரத்தில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்று மத்திய அரசு கூறியிருப்பதாகவும் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு தான் முதலிடம் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி பயணம்..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

உதகை மருத்துவக் கல்லூரி தொடர்பாக கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் எந்தப் பணிகளும் நடக்கவில்லை என தெரிவித்தார். வாகனங்கள் செல்லாத இடங்களில் கூட மக்களை தேடி மருத்துவம் திட்டம் சென்றுள்ளது என பேசிய அவர், வனவிலங்கு தாக்கி உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது, குன்னூர், கோத்தகிரியில் அதிநவீன மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன.,அழிவின் நிலையில் இருந்த வரையாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நிதி ஒதுக்கப்பட்டது என தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக நீலகிரியில் மினி டைடல் பார்க் வர உள்ளது என்றும் நீலகிரி மாவட்டம் கூடலூரில் 300 வீடுகள் கொண்ட கலைஞர் நகர் அமைக்கப்படும் எனவும் பழங்குடியின மக்களுக்கு 1,000 கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது என்றும் கூறினார். அதுமட்டுமல்லாது பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: தப்பு செஞ்சவங்கள தண்டிக்காம விவசாயிகளை வஞ்சிக்கிறது நியாயமா..? சீமான் ஆவேசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share