×
 

இந்தியப் பொருட்களுக்கு வரி விதித்த ட்ரம்ப்.. மெளன விரதத்தில் மோடி.. வெளுத்து வாங்கும் எதிர்க்கட்சி.!!

இந்தியப் பொருளாதாரம் சிக்கலில் இருக்கும்போது, பிரதமர் மோடி மெளன விரதத்தைத் தொடங்குகிறார் என்று மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கவுரவ் கோகாய் விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிக்கும் திட்டத்தின் கீழ் இந்தியப் பொருட்களுக்கு 27 சதவீத வரிகளை அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்துள்ளார். இதேபோல சீனா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளுக்கு ட்ரம்ப் வரி விதித்துள்ளார். இதற்குப் பதிலடியாக அமெரிக்கப் பொருள்களுக்கு சீனாவும் வரி விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில்
இந்திய பொருட்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் 27 சதவீதம் வரி விதித்துள்ளது குறித்து பிரதமரையும், பாஜக அரசையும் கவுரவ் கோகாய் சாடியுள்ளார்.



இது குறித்து அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்தியப் பொருளாதாரம் சிக்கலில் உள்ள நேரத்தில் பிரதமர் மோடி மெளன விரதத்தைத் தொடங்கி உள்ளார். அவர் தன்னுடைய மெளன விரதத்தைக் கலைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அமெரிக்காவின் வரிகள் நமது சிறுதொழில்கள், சிறு குறு நிறுவனங்கள், விவசாயத் துறைகளின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன்?



பிறநாட்டுத் தலைவர்கள் எல்லாம், தங்களின் விளக்கங்களை கொடுத்து வருகிறார்கள். தங்கள் நாடுகளின் மீதான வரி விதிப்புக்கு அவர்கள் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், நமது பிரதமர் மட்டும் இதுகுறித்து ஏதுவும் சொல்லாமல் இருக்கிறார். அவர் எங்கே இருக்கிறார்? இந்தியப் பொருளாதாரம் சிக்கலில் இருக்கும் போதெல்லாம், இந்த அரசு பின்வாங்கி, பிரித்தாளும் அரசியலை முன்னெடுக்கிறது என்பதையே இது காட்டுகிறது" என்று கவுரவ் கோகாய் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்திய இறக்குமதிக்கு 26% வரி விதித்த அமெரிக்கா; உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் பின்னலாடை நிறுவனங்கள்..!

இதையும் படிங்க: உலகமே ஷாக்... இந்தியா மீது வர்த்தகப்போர் தொடங்கிய டிரம்ப்... நள்ளிரவில் அதிரடி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share