×
 

‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அழிக்கும்’ ‘டிபிடிபி சட்டம்’: இந்தியா கூட்டணி குற்றச்சாட்டு..!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அழிக்கும் வகையில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தில் பிரிவு 44(3) இருக்கிறது, அதை உடனே நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் உருவாக்கிய இந்தியா கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லியில் இன்று எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் ஊடகங்களுக்கு பேட்டியளித்தனர். இந்த கூட்டத்தில் திமுக சார்பில் எம்எம் அப்துல்லா, சிவசேனா உத்தவ் கட்சி சார்பில் பிரியங்கா திரிவேதி, மார்க்சிஸ்ட் சார்பில் ஜான் பிரிட்டாஸ், சமாஜ்வாதி சார்பில் ஜாவித் அலிகான், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் நாவல் கிஷோர், காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்றனர். 

இந்தக் கூட்டத்தின் முடிவில் காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகய் பேட்டியளித்தாவது:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அழிக்கும் வகையில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தில் பிரிவு 44(3) இருக்கிறது, அதை உடனே நீக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் சார்பில் 140 எம்.பிக்கள் சேர்ந்து கையொப்பமிட்டு கூட்டாகச் சென்று, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை மனு அளிக்க இருக்கிறோம்.

இதையும் படிங்க: வியக்க வைக்கும் புதிய பாம்பன் பாலம்.. ஒரு பொறியியல் அதிசயம்.. ரயில்வே அமைச்சர் புகழாரம்.!!

சிவில் உரிமை பாதுகாவலர்கள், டிபிடிபி சட்டத்தில் உள்ள 44(3) பிரிவு என்பது ஆர்டிஐ சட்டம் பிரிவு 8(1)(ஐ) ஆகியவற்றுக்கு மாற்றுதான். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8(1)(j) தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவது எந்தவொரு பொது செயல்பாட்டுக்கும் அல்லது பொதுநலனுக்கும் தொடர்பில்லாததாக இருந்தால் அல்லது தனி உரிமையின் மீது தேவையற்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால் அதை நிறுத்தி வைக்க அனுமதிக்கிறது.

இந்த கட்டுப்பாடு ஒரு முக்கியமான பாதுகாப்பிற்கு உட்பட்டது: மத்திய பொது தகவல் அதிகாரி, மாநில பொது தகவல் அதிகாரி அல்லது மேல்முறையீட்டு அதிகாரி தகவலை வெளியிடுவது பொது நலனுக்கு உதவும் என்று தீர்மானித்தால் இன்னும் கிடைக்கச் செய்யலாம்.
ஆனால், டிபிடிபி சட்டத்தில் உள்ள பலஷரத்துக்குள், ஆர்டிஐ சட்டத்தையே கட்டுப்படுத்துகிறது. ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தனிப்பட்ட நபரின் தகவல்கள் பகிரப்படாது. ஆனால், டிபிடிபி சட்டத்தில் பொதுநலன் கருதி அந்த தனிநபரின் தனியுரிமை தகவல்களை  பொதுவெளியில் பகிரலாம் என்று இருப்பது ஆபத்தானது ஆர்டிஐ சட்டத்தையே அழித்துவிடும்” எனத் தெரிவித்தார்.

ஆர்டிஐ சட்டத்தின் சாராம்சத்தை சிதைத்துவிடும் வகையில் டிபிடிபி சட்டம் இருப்பதால் அதை எம்.பிக்கள் சேர்ந்து எதிர்க்க வேண்டும் எனக் கோரி தகவல் உரிமைக்கான தேசிய பிரச்சார அமைப்பு(என்சிபிஆர்) குரல் கொடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் இணை நிறுவனர் அஞ்சலி பரத்வாத் எம்.பி.க்களுக்கு கடிதமும் எழுதியுள்ளார்.


 

இதையும் படிங்க: இனி யார்கிட்டயும் கெஞ்ச வேண்டாம்.. ரயிலில் கீழ்வரிசை படுக்கை இவங்களுக்கு மட்டும்தான்.. மத்திய அரசு உறுதி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share