இழுத்து மூடப்பட்ட கடைகள்; ஆபத்பாந்தவனாக மாறிய அம்மா உணவகங்கள்....!
இதனால் உதகைக்கு சுற்றலா வந்த சுற்றுலா பயனிகள் உண்ண உணவு கிடைக்காமல் தெருக்களில் அலைந்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்திற்குள் இருக்கக்கூடிய சுற்றுலா தலங்கள் போன்ற இடங்களுக்கு வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் இயற்கை பாதிப்புகள் மற்றும் போக்குவரத்து நெரிசலானது அதிகரித்து காணப்பட்டு வருகிறது இதை கட்டுப்படுத்துவதற்காக ஏற்கனவே இ-பாஸ் முறையானது நடைமுறைப்படுத்தப்பட்டு அமலில் இருந்த நிலையில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் இ பாஸ் இருந்தால் மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்ட வருகிறது .
இந்த இ பாஸ் நடைமுறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என கூறி கூடலூர் ,பந்தலூர் ,உதகை, குன்னூர் என நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டமானது நடைபெற்று வருகிறது. குன்னூர் நகரில் மட்டும் சுமார் 3000 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஊட்டி, குன்னூரில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று காத்திருக்கும் அதிர்ச்சி ...!
அதுமட்டுமின்றி 12அம்ச கோரிக்கைகளான புதிதாக அமைக்கப்பட்டுள்ள இ பாஸ் நடைமுறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் ,தேயிலை விவசாயிகளின் பசுவும் தேயிலைக்கு குறைந்தபட்சம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும், கூடலூர் மக்களின் நீண்ட கால பிரச்சனையான செக்சன் 17 நிலத்திற்கு தீர்வு வழங்க வேண்டும், வனவிலங்குகளிடமிருந்து பகுதி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் ,பிளாஸ்டிக் தடை சட்டத்திற்கு முறையாக மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் போன்ற 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 24 மணி நேர கடையடைப்பு போராட்டம் ஆனது நடைபெற்று வருகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் உணவு கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். முழு அடைப்பு போராட்டம் காரணமாக உதகையில் உள்ள உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கிறது. இதனால் அங்கு இருக்கக்கூடிய சுற்றுலா பயணிகள் உணவு கிடைக்காமல் அவதி அடைந்து வரக்கூடிய சூழல் உருவாகி இருக்கிறது. இதனால் உதகைக்கு சுற்றலா வந்த சுற்றுலா பயனிகள் உண்ண உணவு கிடைக்காமல் தெருக்களில் அலைந்து வருகின்றனர்.
ஊட்டியில் திறந்திருக்கக்கூடிய அம்மா உணவுகங்களில் குடும்பத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் உணவருந்தினர். மலைப்பகுதிகளில் உள்ள அரசு கேண்டீன்களிலும் நீண்ட வரிசையில் நின்று அங்கு கிடைக்கக்கூடிய பிஸ்கட் போன்ற ஸ்நாக்ஸ் வகைகளை சுற்றுலா பயணிகள் வாங்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஸ்தம்பிக்கப்போகும் நீலகிரி... ஏப்ரல் 2ம் தேதி நடக்கப்போகும் அதிரடி.. வணிகர்கள் சங்கம் கொந்தளிப்பு...!