தொடர் விடுமுறை எதிரொலி.. 3 லட்சத்துக்கும் அதிகமானோர் அரசு பேருந்துகளில் பயணம்.. போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு!
மூன்று நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு தலைநகர் சென்னையில் இருந்து சுமார் மூன்று.32 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகளில் பயணித்துள்ளதாக போக்குவரத்து கலகம் தெரிவித்துள்ளது.
வார விடுமுறை மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து ஏராளமானோர் அவரவர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
பெரும்பாலானோர் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். முன்னதாக பயணிகளின் அசவுகரியம் மற்றும் சிரமத்தை போக்கும் வகையில், தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
தமிழக அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பேருந்துகள் பயணிகளின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ஏராளமானோர் பயனடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சார்பில் வார விடுமுறை மற்றும் தமிழ் வருட பிறப்பு முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று நள்ளிரவு முதல் இயக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: 2026இல் துணை முதல்வரா.? பதறிபோய் செல்வபெருந்தகை எடுத்த அதிரடி ஆக்ஷன்.!
அதன்படி நேற்று அதிகாலை 2 மணி வரை வழக்கமாக இயக்கப்பட்டு வரும் பேருந்துகளின் எண்ணிக்கை நிலவரப்படி 2092 பேருந்துகளும் 1153 சிறப்பு பேருந்துகளும் மொத்தமாக 3,245 பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தமாக 11-ம் தேதியிலிருந்து இன்று அதிகாலை 2 மணி வரையில் சுமார் 3 லட்சத்து 32 ஆயிரத்து 695 பயணிகள் பயணித்துள்ளதாக போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வக்ஃபு திருத்த மசோதா... திமுக ஸ்டைலில் களமிறங்கிய விஜய்..!