7 ஆயிரம் பெண்கள், மகா கும்ப மேளாவில் துறவறம் பூண்டனர்; பெரும்பான்மையினர் பட்டதாரிகள்
மகா கும்பமேளா விழாவில் இந்த ஆண்டு ஏழாயிரத்துக்கும் அதிகமான பெண்கள் துறவறம் பூண்டு சன்னியாச தீட்சை எடுத்துக் கொண்டனர். அவர்களின் பெரும்பான்மையோர் பட்டப் படிப்பு படித்தவர்கள்.
மகா கும்பமேளா விழாவில் இந்த ஆண்டு ஏழாயிரத்துக்கும் அதிகமான பெண்கள் துறவறம் பூண்டு சன்னியாச தீட்சை எடுத்துக் கொண்டனர். அவர்களின் பெரும்பான்மையோர் பட்டப் படிப்பு படித்தவர்கள். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மகா கும்பமேளாவின் 210 பெண்கள் நாக சந்நியாசிகளாக தீட்சை பெற்றனர்.
சனாதன தர்மத்தை காப்பதற்காக நடைபெற்று வரும் மகா கும்பத்தின் போது பல்வேறு அகாராக்களில் 7000க்கும் அதிகமான பெண்கள் சன்னியாச தீட்சை எடுத்துக் கொண்டதாக உத்தரபிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து முக்கிய அகராக்களிலும் குரு தீட்சை எடுத்துக் கொண்ட அந்த பெண்கள் சனாதனத்திற்கு சேவை செய்வதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அகாராவின் தலைவர் டாக்டர் தேவ்ய கிரி கூறும் போது, "இந்த முறை மகா கும்பத்தில் 246 பெண்களுக்கு நாகசன்னியாசியாக தீட்சை வழங்கப்பட்டது. தீட்சை பெற்ற பெண்களின் பெரும்பான்மையாக பட்டதாரிகள் இருந்தனர்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மகா கும்பமேளாவில் நாளை புனித நீராடும் பிரதமர் நரேந்திர மோடி...
மகா கும்பமேளாவில் இளைஞர்களின் பங்கு குறித்து ஆராய்ச்சி செய்ய வந்த டெல்லி பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி இப்சிதா ஹோல்கர் முதல் நீராடும் விழாவான பவுஷ் பூர்ணிமா முதல் வசந்த பஞ்சமி வரை பல்வேறு நுழைவு வாயில்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கும்பமேளாவிற்கு வரும் ஒவ்வொரு 10 பார்வையாளர்களில் நான்கு பேர் பெண்கள் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: காணாமல் போன 13 ஆயிரம் பேர்..! அதிரடியாக மீட்ட "கோயா பாயா" பிரிவு.! கும்பமேளாவில் உபி அரசு அசத்தல்