6 பேரை காவு வாங்கிய சாத்தூர் வெடி விபத்து; அதிகாலையிலேயே அதிரடி ஆக்ஷனில் இறங்கிய காவல்துறை!
சாத்தூர் அருகே பொம்மையாபுரத்தில் நேற்று காலை நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 6 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆலை உரிமையாளர்களில் ஒருவரான சசிபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் பலியான தில் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் ஆலை உரிமையாளர் சசிபாலனை இன்று அதிகாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர் அருகே பொம்மையாபுரத்தில் நேற்று காலை பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சிவகுமார் (56), குருந்தமடத்தைச் சேர்ந்த வேல்முருகன் (54), காமராஜ் (54), பொம்மையாபுரத்ததைச் சேர்ந்த கண்ணன் (54), அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் (46), செட்டிக்குறிச்சியைச் சேர்ந்த நாகராஜ் (37) ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த முகமது சுதீன்(21) மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.இதுதொடர்பாக ஆலையின் உரிமையாளர் பாலாஜி (லைசன்ஸ்தாரர்)
மற்றும் தற்போது ஆலையை வாங்கிய சசிபாலன்,தேவி, போர்மேன்கள் கணேசன்,பிரகாஷ்,பாண்டியராஜன்,சூப்பர்வைசர் சதீஷ்குமார் ஆகிய 7 பேர் மீது வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் போர்மேன் கணேசன் மற்றும் சூப்பர்வைசர் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் வச்சக் காரப்பட்டி காவல் துறையினர் நேற்று இரவு கைது செய்தனர். இந்நிலையில் ஆலை உரிமையாளர் சசிபாலனை இன்று அதிகாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து - உரிமையாளர்கள் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!
இதையும் படிங்க: சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து - உரிமையாளர்கள் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!