×
 

பங்குனி தேரோட்டம்.. எட்டுத்திக்கும் நடைபெற்ற கொடியேற்று விழா..! ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

திருவானைக்காவல் கோவிலில் பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு எட்டுத்திக்கும் கொடியேற்றம் நடைபெற்றது .

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்ஸ்தலமாக விளங்கும் திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயில் திகழ்கிறது. பாரம்பரியமும், பழம்பெருமையும்மிக்க இக்கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பிரமோற்சவம் 48-நாட்கள் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படும். 

இதன்படி, இந்தாண்டுக்கான மண்டல பிரமோற்சவம்எனப்படும் பங்குனி திருவிழா கடந்த 8ம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் எட்டுத்திக்கும் கொடியேற்றம் வெகு வரிசையாக நடைபெற்றது.

சந்திரசேகரர் மற்றும் அம்பாள் பல்லக்கில் புறப்பாடு நடைபெற்று 3ம் பிரகாரத்தில் வீதிஉலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாள் முன்னிலையில் எட்டுத்திக்கும் உள்ள கொடி மரங்கள் மற்றும் கொடிபடத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் எட்டுத்திக்கிலும் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது, இதில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

இதையும் படிங்க: உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..!

தினசரி பல்வேறு வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதிஉலா வரும் வைபவம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான பங்குனி  தேரோட்ட வைபவம் மார்ச் 30ம் தேதியன்று காலை 7.20 மணிக்கு வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் சுரேஷ் தலைமையில், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற பூச்சொரிதல் விழா.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share