பங்குனி பிரம்மோற்சவம்.. திருத்தேரோட்ட விழாவில் ஒன்று திரண்ட கிராம மக்கள்..
பங்குனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வெங்கடாஜலபதி சுவாமி கோவிலில் திருத்தேரோட்டம் நிகழ்வு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பகோணம் அடுத்துள்ள வெங்கடாஜலபதி சுவாமி திருக்கோயில் ஆனது 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றாகவும் தமிழகத்தில் உள்ள வைணவ ஸ்தலங்களில் சிறப்புடைய ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. தென்னக திருப்பதி என்றழைக்கப்படும் இச்சிறப்பு பெற்ற தளத்தில் மூலவர் பெருமாள் கிழக்கு நோக்கியும், தாயார் பூமி தேவி வடக்கு நோக்கி அமர்ந்தும், மார்க்கண்டே மகரிஷி அமர்ந்து கன்னிகாதானம் செய்யும் கோலத்தொழில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.
இந்த புண்ணிய ஸ்தலத்தில் திருமங்கையாழ்வார் பொய்கையாழ்வார், பேயாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் மங்கள சாசனம் செய்யப்பட்ட பெருமையையும் கொண்டுள்ளது. என்ன தல ஸ்தலத்தில் ஆண்டுதோறும் பங்குனி பிரம்மோற்சவத்தின் போது 12 நாட்களுக்கு சுவாமிக்கு பூஜைகளும், சிறப்பு ஆராதனைகளும் செய்வது வழக்கம்.
அதன்படி கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய பிரம்மோற்சவ விழா, தினம் தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி முக்கிய வீதிகளில் திருவீதி உலா பிரமாண்டமாக நடைபெற்றது.
இதையும் படிங்க: போக்சோ வழக்கில் கைதான கைதி பலி.. மத்திய சிறையில் சலசலப்பு..
நிகழ்ச்சியின் முக்கிய நாளான இன்று திருவோண நட்சத்திரத்தில் உற்சவர் பருமாள் ஸ்ரீ பொன்னப்பர் பூமி தேவி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நாட்டிய குதிரை நடனம், தமிழ் நாதஸ்வர இசை முழங்க கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரோட்டத்தை காண்பதற்கு சுற்றியுள்ள அனைத்து கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஒன்பது ரெண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதையும் படிங்க: மீண்டும் தலைதூக்கும் ராகிங்..! 3 ஆண்டுகளில் 51 பேர் மரணம்.. தேசிய அளவில் வெளியான புள்ளி விவரம்..!